இந்த வாரம் திரையரங்குகள், ஓடிடி மற்றும் திரையரங்குகளுக்குப் பிறகு ஓடிடியில் ரிலீஸாகும் படங்கள் குறித்து பார்ப்போம். தியேட்டர் ரிலீஸ்: பிருத்விராஜ் நடித்துள்ள ‘ஆடுஜீவிதம்’ இன்று (மார்ச் 28) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஓவியாவின் ‘பூமர் அங்கிள்’, கலையரசனின் ‘ஹாட்ஸ்பாட்’, சந்தோஷ் பி ஜெயகுமாரின் ‘தி பாய்ஸ்’, தவிர்த்து புதுமுகங்களின் ‘இடி மின்னல் காதல்’, ‘வெப்பம் குளிர் மழை’, ‘நேற்று இந்த நேரம்’ ஆகிய படங்கள் வெள்ளிக்கிழமை வெளியாகின்றன.
கரீனா கபூரின் ‘க்ரியூ’ (Crew) இந்திப் படம் நாளை வெளியிடப்பட உள்ளது. ஆடம் விங்கார்ட்டின் ‘Godzilla x Kong: The New Empire’ ஹாலிவுட் படம் நாளை ரிலீசாகிறது.
நேரடி ஓடிடி ரிலீஸ்: ரவீனா டன்டனின் ‘பாட்னா சுக்லா’ (Patna Shukla) டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் நாளை காணக் கிடைக்கும். ஸ்போர்ட்ஸ் டிராமாவான ‘தி பியூட்டிஃபுல் கேம்’ (The Beautiful Game) ஹாலிவுட் படத்தை நெட்ஃப்ளிக்ஸில் வெள்ளிக்கிழமை முதல் காணலாம்.
திரையரங்குகளுக்கு பிறகான ஓடிடி ரிலீஸ்: மணிகண்டன் நடித்துள்ள ‘லவ்வர்’ திரைப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் தற்போது காணக்கிடைக்கிறது.
கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கிய ‘ஜோஷ்வா’ அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. ஷபீரின் ‘பர்த் மார்க்’ ஆஹா ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது. ரவி தேஜா தயாரித்துள்ள ‘சுந்தரம் மாஸ்டர்’ தெலுங்கு படம் ஆஹா ஓடிடியில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இணைய தொடர்கள்: நவீன் சந்திராவின் ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’ (Inspector Rishi) வெப் சீரிஸ் அமேசான் ப்ரைம் ஓடிடியில் நாளை வெளியிடப்பட உள்ளது.