ஓடிடி தகவல்

கொலையும் டார்க் காமெடியும்: நெட்ஃப்ளிக்ஸின் ‘மர்டர் முபாரக்’ ட்ரெய்லர் எப்படி?

செய்திப்பிரிவு

மும்பை: பங்கஜ் திரிபாதி, சாரா அலி கான், விஜய் வர்மா நடிப்பில் ஹோமி அடஜானியா இயக்கியுள்ள ‘மர்டர் முபாரக்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

இந்த ஆண்டுக்கான வெப் தொடர்கள் மற்றும் திரைப்படங்கள் பற்றிய ஒரு ‘மெகா’ அறிவிப்பை நெட்ஃப்ளிக்ஸ் தளம் அண்மையில் வெளியிட்டிருந்தது. அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள படங்களில் ஒன்று ‘மர்டர் முபாரக்’.

பங்கஜ் திரிபாதி, சாரா அலி கான், விஜய் வர்மா, டிம்பிள் கபாடியா உள்ளிட்டோர் பிரதான வேடங்களில் நடித்துள்ள இப்படத்தை ஹோமி அடஜானியா இயக்கியுள்ளார். வரும் மார்ச் 15ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகும் இந்த படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது.

ட்ரெய்லர் எப்படி? - டெல்லியில் உள்ள ஒரு மிகப்பெரிய நட்சத்திர ஓட்டலில் ஒரு கொலை நடக்கிறது. அதனை விசாரிக்க வருகிறார் போலீஸ் அதிகாரியான பங்கஜ் திரிபாதி. கொலை நடந்த நேரத்தில் அங்கிருந்த பணக்காரர்கள், ஊழியர்களை பங்கஜ் திரிபாதி விசாரிப்பதாக ட்ரெய்லரில் காட்டப்படுகிறது.

டார்க் காமெடி வசனங்கள், ஒளிப்பதிவு, காட்சியமைப்புகள் ஆகியவை இதே நெட்ஃப்ளிக்ஸ் தயாரிப்பில் வெளியான ‘நைவ்ஸ் அவுட்’ (Knives Out) படத்தை நினைவூட்டுகிறது. ட்ரெய்லரில் வரும் பின்னணி இசை கவனம் ஈர்க்கிறது. டார்க் காமெடி வசனங்கள், புத்திசாலித்தனமான துப்பறியும் காட்சிகள் என ஒரு பரபரப்பான க்ரைம் த்ரில்லராக இப்படம் இருக்கும் நம்புவோம். ‘மர்டர் முபாரக்’ ட்ரெய்லர் வீடியோ:

SCROLL FOR NEXT