ஓடிடி தகவல்

தெலுங்கில் ரூ.300 கோடி வசூலித்த ‘ஹனுமான்’ மார்ச் 8-ல் ஓடிடியில் ரிலீஸ்!

செய்திப்பிரிவு

சென்னை: தெலுங்கில் ரூ.300 கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூலைக் குவித்த ‘ஹனுமான்’ திரைப்படம் வரும் மார்ச் 8-ம் தேதி ஓடிடியில் வெளியாகிறது.

இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தேஜா சஜ்ஜா நடிப்பில் கடந்த ஜனவரி 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘ஹனுமான்’. இந்தப் படத்தில் அமிர்தா ஐயர், வரலட்சுமி சரத்குமார், சமுத்திரகனி, வினய் ராய், வெண்ணிலா கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தை நிரஞ்சன் ரெட்டி தயாரித்துள்ளார்.

கௌரஹரி இசையமைத்துள்ளார். தெலுங்கில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே பெற்ற வரவேற்பின் காரணமாக, ரூ.300 கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்தது. படத்தின் பட்ஜெட் வெறும் ரூ.50 கோடி என கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படம் வரும் மார்ச் 8-ம் தேதி ஜீ5 ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT