ஓடிடி தகவல்

கிறிஸ்டோஃபர் நோலனின் ‘ஓப்பன்ஹெய்மர்’ மார்ச் 21-ல் ஓடிடியில் ரிலீஸ்!

செய்திப்பிரிவு

சென்னை: கிறிஸ்டோஃபர் நோலனின் ‘ஓப்பன்ஹெய்மர்’ (Oppenheimer) ஹாலிவுட் திரைப்படம் வரும் மார்ச் 21-ம் தேதி ஓடிடியில் வெளியிடப்பட உள்ளது.

ஹாலிவுட்டில் ‘தி டார்க் நைட் ரைசஸ்’, ‘இன்டர்ஸ்டெல்லர்’, ‘இன்செப்ஷன்’, ‘டன்க்ரிக்’, ‘டெனட்’ உள்ளிட்ட படங்கள் மூலம் கவனம் பெற்றவர் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன். இவரது இயக்கத்தில் உருவாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற படம் ‘ஓப்பன்ஹெய்மர்’. அமெரிக்க அணுசக்தி விஞ்ஞானியான ஜே.ராபர்ட் ஓப்பன்ஹெய்மர் என்பவரின் வாழ்க்கையைக் கதைக்களமாக கொண்டு உருவான இப்படம் கடந்த ஆண்டு ஜூலை 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதில் அமெரிக்க அணு சக்தி விஞ்ஞானியான ஜே.ராபர்ட் ஓப்பன்ஹைமர் கதாபாத்திரத்தில் ஹாலிவுட் நடிகர் சிலியன் மர்பி நடித்துள்ளார்.

‘அயர்ன்மேன்’ புகழ் ராபர்ட் டௌனி ஜூனியர், எமிலி பிளன்ட், மேட் டேமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சர்வதேச அளவில் பல்வேறு விருதுகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் இப்படம் ஒட்டுமொத்தமாக ரூ.820 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படுகிறது.

உலகம் முழுவதும் படம் கிட்டத்தட்ட ரூ.8 ஆயிரம் கோடியை வசூலித்தது. இந்நிலையில், இப்படம் வரும் மார்ச் 21-ம் தேதி ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் வெளியிடப்பட உள்ளது. மேலும் தற்போது படத்தை காண விரும்புபவர்கள் அமேசான் ப்ரைம் ஓடிடியில் தனி கட்டணம் செலுத்தி படத்தை பார்க்க முடியும்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT