ஓடிடி தகவல்

விஜய்குமாரின் ‘ஃபைட் கிளப்’ ஜன.27-ல் ஓடிடியில் ரிலீஸ்

செய்திப்பிரிவு

சென்னை: விஜய்குமார் நடித்துள்ள ‘ஃபைட் கிளப்’ திரைப்படம் ஜனவரி 27-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

‘உறியடி’ திரைப்படத்தின் மூலம் புகழ் பெற்ற விஜய்குமார் நடித்துள்ள படம் ‘ஃபைட் கிளப்’. இந்தப் படத்தை அப்பாஸ் ரஹ்மத் இயக்கியுள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். கார்த்திகேயன் சந்தானம், ஷங்கர் தாஸ் உள்ளிட்ட பலர் படத்தில் நடித்துள்ளனர். ஆதித்யாவுடன் இணைந்து லோகேஷ் கனகராஜ் படத்தை தயாரித்துள்ளார்.

கடந்த ஆண்டு டிசம்பர் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. படத்தின் மேக்கிங் பலராலும் பாராட்டப்பட்டது. ஆனால், படத்தின் திரைக்கதையும், வலுவில்லாக காட்சிகளும் ரசிகர்களை கவரவில்லை. ரூ.6 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் ரூ.7 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இப்படம் வரும் 27-ம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஒடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT