இந்த வாரம் திரையரங்குகள், ஓடிடி மற்றும் திரையரங்குகளுக்குப் பிறகு ஓடிடியில் ரிலீஸான படங்கள் குறித்து பார்ப்போம்.
தியேட்டர் ரிலீஸ்: இந்த வாரம் தமிழ் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. சுரேஷ் கோபி, பிஜூ மேனன் நடித்துள்ள ‘கருடன்’ மலையாளப் படம் நாளை (நவ.3) திரையரங்குகளில் வெளியாகிறது. அபிமன்யு தசானி, மிருணாள் தாக்குர் நடித்துள்ள ‘ஆன்க் மிச்சோலி’ (Aankh Micholi) பாலிவுட் படமும், தருண் பாஸ்கர் தாஸ்யமின் ‘கீடா கோலா’ (Keedaa Cola) தெலுங்கு படமும் நாளை வெளியிடப்பட உள்ளது.
நேரடி ஓடிடி ரிலீஸ்: ரோஸ் வில்லியம்ஸின் ‘லாக்டு இன்’ (Locked In) ஹாலிவுட் படமும், வின்ங் வூமன் (Wingwomen) ப்ரெஞ்சு படமும் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி தற்போது காணக்கிடைக்கிறது.
திரையரங்குகளுக்கு பிறகான ஓடிடி ரிலீஸ்: லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் ‘ஆர் யூ ஓகே பேபி’ படம் ஆஹா ஓடிடி தளத்தில் காணக்கிடைக்கிறது. விக்ரம் பிரபுவின் ‘இறுகப்பற்று’ நவம்பர் 6-ம் தேதி வெளியாகிறது. விஜய் ஆண்டனியின் ‘ரத்தம்’ நாளை (நவ.3) அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகிறது.
ஷாருக்கானின் ‘ஜவான்’ நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் தற்போது காணக்கிடைக்கிறது. ராம்பொத்தினேனியின் ‘ஸ்கந்தா’ (Skanda) ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது. நவீன் சந்திராவின் ‘மன்த் ஆஃப் மது’ தெலுங்கு படம் ஆஹா ஓடிடியில் நாளை காணக்கிடைக்கும்.
இணையதள தொடர்: அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ள ‘லேபில்’ வெப் சீரிஸ் நவம்பர் 10-ல் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகிறது.