ஓடிடி தகவல்

ஓடிடியில் ரிலீஸ் ஆகும் ‘கூழாங்கல்’

செய்திப்பிரிவு

சென்னை: நடிகை நயன்தாரா, கணவர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்புநிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிறுவனம் ‘கூழாங்கல்’ என்ற படத்தைத் தயாரித்தது. பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கிய இந்தப் படத்தில் செல்லப்பாண்டி, கருத்தடையான் உட்பட பல புதுமுகங்கள் நடித்துள்ளனர். ஜெய பார்த்திபன், விக்னேஷ் குமுலை ஒளிப்பதிவு செய்துள்ளனர்.

இந்தப் படம் சர்வதேசப் பட விழாக்களில் பல்வேறு விருதுகளை வென்றுள்ளது. குறிப்பாக ரோட்டர்டாம் விழாவில் விருது வென்ற முதல் தமிழ்ப்படம் என்கிற பெருமையையும் பெற்றுள்ளது. இந்தப் படம் இப்போது நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகிறது. வரும் 27-ம் தேதி சோனி லிவ் ஓடிடிதளத்தில் வெளியாகிறது.

படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார். இந்தப் படம் கடந்த 2021-ம் ஆண்டு ஆஸ்கர் விருதுக்கான சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்துக்காக இந்தியா சார்பில் இந்தப் படம் பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

SCROLL FOR NEXT