ஓடிடி தகவல்

ரஜினியின் ‘ஜெயிலர்’ செப்.7 ஓடிடியில் ரிலீஸ்

செய்திப்பிரிவு

சென்னை: நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர்’ திரைப்படம் வரும் செப்.,7ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி வெளிவந்த திரைப்படம் ‘ஜெயிலர்’. பான் இந்தியா முறையில் வெளியாகி உள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தற்போது திரை அரங்குகளில் வெற்றிகரமாக திரையிடப்பட்டு வருகிறது. இதுவரை இந்தப் படம் சுமார் 600 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தின் மெகா வெற்றியை தொடர்ந்து ரஜினிகாந்துக்கும், இயக்குநர் நெல்சனுக்கு உயர் ரக சொகுசு கார்களை தயாரிப்பாளர் கலாநிதி மாறன் பரிசளித்துள்ளார். மேலும் இருவருக்கும் செக் வழங்கினார்.

இந்த நிலையில், ‘ஜெயிலர்’ திரைப்படம் வரும் செப்.,7ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு ‘ஜெயிலர்’ படத்தின் ஹெடி பதிப்பு இணையத்தில் லீக் ஆகியிருந்த நிலையில், தற்போது படத்தை ஓடிடியில் வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT