ஓடிடி தகவல்

ஓடிடியில் வெளியானது விஜய் ஆண்டனியின் ‘கொலை’ திரைப்படம்

செய்திப்பிரிவு

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவான ‘கொலை’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது. முன்னறிவிப்பின்றி திடீரென படம் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

விஜய் ஆண்டனி, ரித்திகா சிங், மீனாட்சி சவுத்ரி உட்பட பலர் நடித்துள்ள படம் ’கொலை’. இன்பினிட்டி பிலிம் வெஞ்சர்ஸ், லோட்டஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை, பாலாஜி கே.குமார் இயக்கியுள்ளார். இவர் ‘விடியும் முன்’ படத்தின் மூலம் ரசிகர்களிடையே முத்திரை பதித்தவர். சிவக்குமார் விஜயன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ராதிகா சரத்குமார், முரளி சர்மா, சித்தார்த்தா சங்கர், கிஷோர் குமார், ஜான் விஜய், அர்ஜுன் சிதம்பரம் மற்றும் சம்கித் போஹ்ரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்துக்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார்.

கடந்த ஜூலை 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் அதன் தரமான மேக்கிங்கால் பாராட்டப்பட்டது. இந்நிலையில், தற்போது படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி காணக் கிடைக்கிறது.

SCROLL FOR NEXT