சிபிராஜ் நடித்துள்ள ‘மாயோன்’ திரைப்படம் ஓராண்டுக்குப் பிறகு தற்போது அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
என்.கிஷோர் இயக்கத்தில் சிபி சத்யராஜ் நடித்துள்ள படம் ‘மாயோன்’. டபுள் மீனிங் புரொடக்ஷன் தயாரித்துள்ள இப்படத்தில் தன்யா ரவிச்சந்திரன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் கே.எஸ்.ரவிக்குமார், ராதாரவி, பகவதி பெருமாள், ஹரிஷ் பெராடி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
சி. ராமபிரசாத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். ராம் பாண்டியன் மற்றும் கொண்டலராவ் இணைந்து படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
ஃபேன்டஸி கதைக்களத்தைக் கொண்ட இப்படம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் திரையரங்குகளில் வெளியானது. இதையடுத்து ஓராண்டுக்குப் பிறகு தற்போது அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் படம் வெளியாகியுள்ளது.