ஓடிடி தகவல்

திருநங்கை செயற்பாட்டாளராக சுஷ்மிதா சென் - ‘டாலி’ ட்ரெய்லர் எப்படி? 

செய்திப்பிரிவு

மும்பை: திருநங்கை செயற்பாட்டாளர் ஸ்ரீகவுரி சாவந்த் பயோபிக் ஆக உருவாகியுள்ள ‘டாலி’ வெப் தொடரின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

மும்பையைச் சேர்ந்த ஸ்ரீகவுரி சாவந்த் திருநங்கைகளுக்காக குரல் கொடுத்து வருபவர். அவர்களின் உரிமைகளுக்காக, பல்வேறு சட்டப் போராட்டங்களை நடத்தியுள்ளார். அவர் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு டாலி (Taali) என்ற வெப் தொடர் உருவாகியுள்ளது. டாலி என்றால் கைதட்டுதல் என்று பொருள். இதில் ஸ்ரீகவுரி சாவந்தாக சுஷ்மிதா சென் நடிக்கிறார். தேசிய விருது பெற்ற ரவி ஜாதவ் இயக்கி உள்ளார்.

ட்ரெய்லர் எப்படி? - பிறப்பில் ஆணாக ஆக இருக்கும் சுஷ்மிதாவின் கதாபாத்திரம் தன்னுடைய அகத்தை உணர்ந்து ஸ்ரீகவுரி சாவந்த் ஆக அடையும் மாற்றம் ட்ரெய்லரில் நமக்கு காட்டப்படுகிறது. ஸ்ரீகவுரியாக குரலிலும், தோற்றத்திலும் சுஷ்மிதா சென் புதிய அவதாரம் எடுத்துள்ளார். ஸ்ரீகவுரிக்கு சிறுவயது முதல் குழந்தைகள் மீதான பாசம், குழந்தைகளை திருநங்கைகள் தத்தெடுப்பதற்கான உரிமை போராட்டத்தை நீதிமன்றம் வரை கொண்டு சென்றது உள்ளிட்ட காட்சித் துணுக்குகள் ட்ரெய்லரில் வருகின்றன. இத்தொடர், ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகிறது. ‘டாலி’ ட்ரெய்லர் வீடியோ:

SCROLL FOR NEXT