ஓடிடி தகவல்

‘செக்ஸ் எஜுகேஷன்’ இறுதி சீசன் செப்.21ல் ரிலீஸ்

செய்திப்பிரிவு

லண்டன்: நெட்ஃப்ளிக்ஸில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘செக்ஸ் எஜுகேஷன்’ தொடரின் நான்காவது மற்றும் இறுதி சீசன் வரும் செப்டம்பர் 21ஆம் தேதி வெளியாக இருப்பதாக தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

இங்கிலாந்தின் மூர்டேல் என்ற சிறு நகரத்தில் உள்ள உயர்நிலை பள்ளியில் படிக்கும், பதின்பருவ மாணவ மாணவியரின் உறவுச் சிக்கல்கள், அவர்களின் பாலியல் விருப்பங்கள் குறித்து அலசும் தொடர் ‘செக்ஸ் எஜுகேஷன்’. நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் இதுவரை வெளியான மூன்று சீசன்களும் உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்றவை. இந்தியாவிலும் இத்தொடருக்கு பெரும் ரசிகர் கூட்டம் உள்ளது. தற்போது இத்தொடரின் நான்காவது மற்றும் இறுதி சீசன் உருவாகி வருகிறது.

‘செக்ஸ் எஜுகேஷன்’ இறுதி சீசன் வரும் செப்டம்பர் 21ஆம் தேதி வெளியாக இருப்பதாக தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். தொடரின் தயாரிப்பாளர்களில் ஒருவரான லாரி நன் இது குறித்து கூறுகையில், "'செக்ஸ் எஜுகேஷன்’ தொடர் குறித்து நாங்கள் மிகவும் பெருமிதம் கொள்கிறோம். ஒவ்வொரு எபிசோடிலும் மனமுவந்து பணியாற்றிய எங்களுடைய புத்திசாலி எழுத்தாளர்கள், நடிகர்கள், படக்குழு அனைவருக்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். இறுதி சீசனை உங்களிடம் கொண்டு வர அவர்கள் கடுமையான உழைத்துள்ளனர். அதை உங்களுடம் பகிர்ந்துகொள்ள நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்" என்றார்.

SCROLL FOR NEXT