அருள்நிதி நடித்துள்ள ‘கழுவேத்தி மூர்க்கன்’ திரைப்படம் வரும் ஜூன் 23-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சை கௌதம் ராஜ் இயக்கத்தில் அருள்நிதி நடித்த திரைப்படம் ‘கழுவேத்தி மூர்க்கன்’. அம்பேத் குமார் தயாரித்துள்ள இப்படத்தில் துஷாரா விஜயன் நாயகியாக நடித்துள்ளார். சந்தோஷ்பிரதாப், முனிஷ்காந்த், யார்கண்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். கடந்த மே 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
சாதியை வைத்து நடக்கும் அரசியலை பேசிய இப்படத்தில் சந்தோஷ் பிரதாப் கதாபாத்திரங்களின் வடிவமைப்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில், இப்படம் வரும் ஜூன் 23-ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. | விமர்சனத்தை வாசிக்க: கழுவேத்தி மூர்க்கன்: திரை விமர்சனம்