சென்னை: விமல் நடித்த ‘விலங்கு’ வெப் தொடர் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. கிராமத்து பின்னணியில் உருவான அந்த கிரைம் த்ரில்லர் தொடருக்குப் பிறகு வெப் தொடர்களில் அவர் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். இப்போது மீண்டும் ஒரு வெப் தொடரில் விமல் ஒப்பந்தமாகி இருக்கிறார்.
டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாருக்காக உருவாகும் இந்த வெப் தொடரை ராமு செல்லப்பா இயக்குகிறார். இவர், நட்டி, பார்வதி நாயர், சஞ்சிதா ஷெட்டி நடித்த ‘எங்கிட்ட மோதாதே’படத்தை இயக்கியவர். கிராமத்துப் பின்னணியில்உருவாகும் பழிவாங்கும் கதை இது என்று கூறப்படுகிறது. இந்த வெப் தொடரில் ‘பிக்பாஸ்’ பாவ்னி, திவ்யா துரைசாமி உட்பட பலர் நடிக்கின்றனர்.இதன் படப்பிடிப்பு திருநெல்வேலி பகுதியில் நடந்து வருகிறது.