வெறும் ரூ.3 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு ரூ.65 கோடி வரை வசூலித்த ‘ரோமாஞ்சம்’ மலையாள திரைப்படம் வரும் ஏப்ரல் 1-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிகப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘ரோமாஞ்சம்’. அறிமுக இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சௌபின் ஷாஹிர், செம்பன் வினோத், அர்ஜூன் அசோகன், அசீம் ஜமால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ள இப்படத்தை ஜான்பால் ஜார்ஜ், கிரீஷ் கங்காதரன் ஆகியோர் இணைந்து தயாரித்திருந்தனர்.
காமெடி ஹாரர் பாணியில் உருவான இப்படத்தின் ஒட்டுமொத்த பட்ஜெட் ரூ.3 கோடி என கூறப்படுகிறது. இப்படம் ரூ.65 கோடி வரை வசூலித்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் ஹிட்டடித்தது. இந்நிலையில் இப்படம் வரும் ஏப்ரல் 7-ம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.