முத்ரா வங்கி திட்டத்தின் கீழ் மொத்தம் ரூ.8,000 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.
சென்னை மாவட்டத்துக்கான முத்ரா கடன் திட்ட ஊக்குவிப்பு முகாம் தொடக்க விழா சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் தமிழக ஊரக வளர்ச்சி, சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசும்போது, ''முத்ரா வங்கி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 15-ம் தேதி வரை 21.24 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். அவர்களுக்கு மொத்தம் ரூ.8,000 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை மகளிர் சுயஉதவி குழுக்கள் தங்கள் தொழில் மேம்பாட்டுக்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்'' என்றார்.