வேளச்சேரி, காந்தி சாலையில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுபானக் கடையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது அகற்றப்போவதாக அறிவித்துள்ள 500 மதுபானக் கடைகளுடன் இந்த கடையையும் அகற்ற வேண்டும்.
லெட்சுமணன், வேளச்சேரி.
இரவு நேரத்தில் தொடரும் மின்தடை
சூளைமேடு திருவேங்கடபுரம் இரண்டாவது தெருவில் இரவு நேரங்களில் தொடர்ந்து மின்தடை ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது. மும்முனை இணைப்பு வசதியிருந்தும் எந்தப் பயனும் இல்லை. புழுக்கம் காரணமாக குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்.இது குறித்து புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, மின்தடையை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பி.ஆனந்தன், சூளைமேடு.
நீக்கப்படாத குப்பைக் கழிவுகள்
மேற்கு தாம்பரம் பகுதிக்கு உட்பட்ட வார்டு எண்-32 லெட்சுமிபுரம் விரிவாக்கம், கேஆர்எஸ் நகரில் உள்ள சாக்கடைக் கழிவுகளை அகற்ற மாநகராட்சி வாகனம் வருவதேயில்லை. மேலும், மழைநீர் கால்வாய் அடைப்புகள் தூர்வாரப்படுவதில்லை. இதனால், சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு ஈக்கள் மற்றும் கொசுத் தொல்லையும் அதிகரித்துள்ளது. எனவே, கழிவுகளை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜேந்திரன், கே.ஆர்.எஸ்.நகர்.
தெருநாய்கள் தொல்லை
எங்கள் பகுதியான பெரம்பூர், பெரியார் நகர் 22-வது தெருவில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால், மக்கள் நடமாட முடிவதில்லை. இரவு நேரங்களில் நடந்து செல்வோரையும் மற்றும் இரு சக்கரவாகனங்களில் செல்வோரையும் துரத்துகிறது. இந்தப் பிரச்சினைக்கு மாநகராட்சி அதிகாரிகள் நிரந்தர தீர்வு ஏற்படுத்தித் தர வேண்டும்.
பத்மாவதி, பெரியார்நகர்.
அதிக ஆட்டோ கட்டணம் தடுக்கப்படுமா?
தாம்பரத்திலிருந்து மண்ணிவாக்கம் செல்லும் டாடா மேஜிக் வாகனங்களில் பகல் நேரங்களில் ரூ.10 கட்டணமாக வாங்குகிறார்கள், ஆனால், இரவு 8 மணிக்கு மேல் கட்டாயப்படுத்தி ரூ.20 கட்டணம் வசூலிக்கிறார்கள். மேலும், 10 பேருக்கு மேல் ஏற்றுகிறார்கள். இதனால் விபத்துகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. இவற்றையெல்லாம் போக்குவரத்துக் காவலர்களும் கண்டுகொள்வதில்லை. இந்த கட்டணக் கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எம்.மணிகண்டன், மண்ணிவாக்கம்.
மின்தடையால் பெரும் அவதி
கிழக்குத் தாம்பரம், சுந்தரம் காலனி பகுதியில் 3 முதல் 4 மணி நேரம் வரை தினமும் மின்தடை ஏற்படுகிறது. தொடர் மின்தடையால் இரவு நேரங்களில் தூக்கம் இல்லாமல் மிகுந்த அவதிப்படுகிறோம். இதுகுறித்து, மின்வாரிய அலுவலகத்துக்கு போன் செய்தால் எப்பொழுதும் ‘பிஸி’யாகவே உள்ளது. நேரில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ராஜாமணி, சுந்தரம் காலனி.
அன்புள்ள வாசகர்களே.. ‘தி இந்து’ வின் ‘உங்கள் குரல்’ சேவையைப் பயன்படுத்தி ஏராளமான வாசகர்கள் தினந்தோறும் தங்களது புகார்கள், குறைகளை பதிவு செய்துவருகின்றனர். அதில் வாசகர்கள் பகிர்ந்துகொண்ட கருத்துகள்: ‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம். நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்... 044-42890002 என்ற எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக் கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). மறு முனையில் ஒலிக்கும் குரலின் வழிகாட்டுதல்படி, 1 அல்லது 2-ஐ அழுத்திவிட்டு உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள். நினைத்ததை நினைத்தமாத்திரத்தில் எந்த நேரத்திலும் எங்களோடு இனி பகிர்ந்துகொள்ள உங்களை அன்போடு அழைக்கிறோம். |