மற்றவை

‘தி இந்து’ - பொதிகை தொலைக்காட்சி இணைந்து வழங்கும் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கைத் தொடர்: 35-வது வாரமாக இன்று ஒளிபரப்பு

செய்திப்பிரிவு

இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் இசை வாழ்க்கையை பிரதிபலிக்கும் விதமாக ‘குறையொன்றுமில்லை’ நிகழ்ச்சி பொதிகை தொலைக்காட்சியில் சனிக்கிழமை தோறும் ஒளிபரப்பாகி வருகிறது. ‘தி இந்து’ நாளிதழுடன் இணைந்து பொதிகை தொலைக்காட்சி வழங்கி வரும் இந்த நிகழ்ச்சியில் எம்.எஸ். சுப்புலட்சுமியின் இசைப் பயணத்தில் நிகழ்ந்த அரிய சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிகழ்ச்சியின் 35-வது அத்தியாயம் சங்கர ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சியாக இன்று ஒளிபரப்பாகவுள்ளது.  ஆதி சங்கரர் அருளிச் செய்த சில பக்தி கீதங்களுக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி இசை வடிவம் கொடுத்து வழங்கிய சில பாடல்களோடு இந்நிகழ்ச்சி தொடங்குகிறது. தொடர்ந்து ஆனந்தி ராதா நடன நிகழ்ச்சியும், அந்த நடன அரங்கேற்றத்துக்கு டி.கே.சிதம்பரநாத முதலியார் எழுதிய விமர்சனமும் இடம்பெறுகிறது. அதைத் தொடர்ந்து ஆனந்தி ராதா இணைந்து வழங்கிய நடன நிகழ்ச்சிகளும், ஆடிய பாடல்களும், எம்.எஸ்.சுப்புலட்சுமி பதம் பாடிய விவரங்களும் இடம்பெறும். பொதிகை தொலைக்காட்சியில் சனிக்கிழமைதோறும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரின் மறு ஒளிபரப்பை செவ்வாய்க்கிழமை இரவு 9.30 மணிக்கு காணலாம்.

SCROLL FOR NEXT