மற்றவை

மெல்ல கற்கும் மாணவர்களுக்காக ‘கற்றல் சி.டி.’: பெற்ற விருதுக்கு பெருமை சேர்த்த தமிழாசிரியர்

ஜெ.ஞானசேகர்

பள்ளி இடைநிற்றல் வெகுவாக குறையும் மாணவர்கள்

மெல்லக் கற்கும் தொடக்க நிலை மாணவர்களுக்கு உதவும் வகை யில் கற்றல் சி.டி. தயாரித்து வழங்கியுள்ளார் மாநகராட்சிப் பள்ளி தமிழாசிரியர் ஒருவர்.

பள்ளிகளில் மாணவர் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கவும், மாண வர் இடைநிற்றலைத் தடுக்கவும் தமிழக கல்வித் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

குறிப்பாக, 1-ம் வகுப்பு முதல் 4-ம் வகுப்பு வரையிலானவர்களுக்கு எளியவழி கற்றல் திட்டம், 5-ம் வகுப்புக்கு மட்டும் எளியவழி படைப்பாற்றல் கல்வி முறை, 6, 7, 8-ம் வகுப்பு மாணவர்களுக்காக படைப்பாற்றல் கல்வி முறை ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

மேலும், 10-ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு வினா வங்கி, வினா- விடை வங்கி, மாதிரி தேர்வுத் தாள்கள், சிறப்புக் கையேடுகள் மற்றும் குறிப்பிட்ட பாடங்களுக்கு சி.டி-க்கள் தயாரித் தும் வழங்கப்படுகின்றன.

இந்நிலையில், அரசுக்கும், கல் வித் துறைக்கும், மாணவச் சமு தாயத்துக்கும் தன்னாலானதைச் செய்யும் நோக்கில், மெல்லக் கற்கும் திறன் கொண்ட தொடக்க வகுப்பு மாணவர்கள் எளிதாக கற்கும் வகையில் சி.டி. தயாரித் துள்ளார் திருச்சி பீமநகரில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளி தமிழாசிரியர் எஸ்.சகுந்தலா. சிறந்த பணிக்காக 2014-ம் ஆண்டில் டாக் டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது பெற்ற இவர், வரும் ஏப்ரல் மாதத்துடன் ஓய்வு பெறவுள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறும் போது, “மெல்லக் கற்கும் திறன் கொண்ட தொடக்க நிலை மாணவர்கள் மீது தனிக் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

குறிப்பாக, தமிழ், ஆங்கில எழுத்துகளை அடையா ளம் காண்பதில்கூட அவர்கள் திறன் குறைந்தவர்களாக உள்ளதா லேயே, அவர்கள் கல்வியில் அக் கறை அற்றவர்களாக உள்ளனர்.

இதனால், ஆசிரியர்கள் கண்டிப் பார்களோ என்ற அச்சத்தில் பள் ளிக்கு ஒழுங்காக வருவதில்லை. பள்ளிக்கு வந்தாலும் தன்னால் நன்றாகப் படிக்க முடியவில்லையே என்ற எண்ணத்தில் வகுப்புகளில் சகஜமாக இருப்பதில்லை.

தமிழ், ஆங்கில எழுத்துகளை அடையாளம் காண்பதற்கும், நன் றாக உச்சரிப்பதற்கும் 1, 2-ம் வகுப்புகளிலேயே பள்ளிக் குழந் தைகளை தயாராக்கிவிட்டாலே, கல்வி மீது பிடிப்பு ஏற்பட்டு அடுத் தடுத்த வகுப்புகளில் நன்றாக படிக் கத் தொடங்கிவிடுவர். இதனால் பள்ளி இடைநிற்றல் வெகுவாக குறையும்” என்றார்.

இதுதொடர்பாக மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் செல் வத்திடம் கேட்டபோது, “தொடக்க நிலை மாணவர்களுக்கு படம் மூலம் எழுத்துக்களை, அவற்றின் உச்சரிப்புகளை விளக்கும்போது எளிதில் புரிந்துகொள்வர். அரசு ஏற்கெனவே பல கல்வி முறை களை செயல்படுத்தியுள்ள நிலை யில், மாணவர்கள் மீதான தமிழா சிரியரின் அக்கறை பாராட்டத் தக்கது. இந்த சி.டி. மாணவர் களுக்குப் பயன் உள்ளதாக இருக்கும். இவரைப் போல, பிற ஆசிரியர்களும் தங்களால் இயன்றதைக் கல்வித் துறைக்கு செய்ய முன்வர வேண்டும்” என்றார்.

இந்த சி.டி-யைத் தான் பணியாற்றும் பள்ளி மட்டுமின்றி, திருச்சி நகர சரகத்துக்கு உட் பட்ட பிற அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக் கும், வட்டார வள மைய பயிற்று நர்களுக்கும் இலவசமாக வழங்கி யுள்ளார் தமிழாசிரியர் சகுந்தலா.

மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு உதவும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள கற்றல் சி.டி. அடுத்தப் படம்: தமிழாசிரியர் சகுந்தலா.

தமிழ், ஆங்கில எழுத்துகளை அடையாளம் காண்பதற்கும், நன்றாக உச்சரிப்பதற்கும் 1, 2-ம் வகுப்புகளிலேயே பள்ளிக் குழந்தைகளை தயாராக்கிவிட்டாலே, கல்வி மீது பிடிப்பு ஏற்பட்டு அடுத்தடுத்த வகுப்புகளில் நன்றாக படிக்கத் தொடங்கிவிடுவர்.

SCROLL FOR NEXT