நவீன யோகாவின் தந்தை எனப் புகழப்படுபவர் திருமலை கிருஷ்ணமாச்சாரியா. ஹட யோகா எனப்படும் கலையை உலகம் முழுவதும் பரப்பியதில் இவருக்குப் பெரும் பங்கு உண்டு. எல்லாருக்கும் பொதுவானதாக யோகா இருந்தாலும் அதில் சில பயிற்சிகளை நபருக்கு நபர் வித்தியாசப்படுத்தி வழங்கியவர். யோக மகரந்தா, யோகாசங்கலு, யோக ராஷ்யா, யோகவள்ளி ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.
நூறு ஆண்டுகள் வாழ்வாங்கு வாழ்ந்து யோகாவை உச்சத்தில் வைத்த கிருஷ்ணமாச்சாரியா, மைசூர் சித்ரதுர்காவில் பிறந்த வர். தந்தை திருமலை நிவாச தத்தாசார்யா. இவருக்கு ஆசனங் கள், பிராணாயாமம், வேதங்கள் போன்றவற்றில் முறையான பயிற்சியை அளித்தார். இமயமலையின் கயி லாய சிகரத்தில் வாழ்ந்துவந்த பிரம்மச்சாரியா என்னும் குருவிடம் 7 ஆண்டுகள் யோக சூத்திரம், பதஞ்சலி யோகம் போன்றவற் றைக் கற்றுத் தேர்ந்தார். குருவின் கட்டளைப்படி இல்லற வாழ்வைத் தொடங்கினார்.
ராஜ குரு
மைசூர் மகாராஜா 4-ம் கிருஷ்ண ராஜ வாடியார் தனது அன்னை யின் 60-ம் ஆண்டு நிறைவை வாரணாசியில் 1926-ல் கொண் டாடினார். அப்போது யோகக் கலையிலும் ஆயுர்வேத மருத் துவத்திலும் புகழோடு விளங்கிய கிருஷ்ணமாச்சாரியாவை சந்தித் தார். அவரது திறமையைக் கண்டு வியந்த மகாராஜா, அரச குடும்பத் தினருக்கும் யோகா பயிற்சி அளிக்குமாறு கேட்டுக்கொண்டார். குறுகிய காலத்திலேயே மைசூர் சமஸ்தானத்தின் ஆஸ்தான வித்வானானார் கிருஷ்ணமாச் சாரியா. மகாராஜாவின் வேண்டு கோளை ஏற்று, யோகக் கலையை நாடு முழுவதும் பரப்பினார்.
96 வயதிலும்..
96 வயதில் கீழே விழுந்ததில் அவரது இடுப்பு எலும்பு முறிந்து விட்டது. ஆனாலும், அவர் அறுவை சிகிச்சைக்கு சம்மதிக்கவில்லை. கட்டிலில் இருந்தபடியே சில ஆசனங்களைத் தொடர்ந்து செய்து, தமக்குத் தாமே சிகிச்சை செய்துகொண்டார். கோமாவில் நினைவை இழந்து மரணத்தைத் தழுவுவதற்கு முன்புவரை, மாண வர்களுக்கு யோகக் கலையை சொல்லிக்கொடுத்தார்.
பி.கே.எஸ்.ஐயங்கார்
கிருஷ்ணமாச்சாரியாவின் பேர் சொல்லும் சீடராக விளங்கிய பி.கே.எஸ்.ஐயங்கார் (பெல்லூர் கிருஷ்ணமாச்சார் சுந்தரராஜ ஐயங் கார்) இந்திய யோகக் கலையின் அருமையை உலகம் முழுவதும் வெளிப் படுத்தியவர். உலகின் பல பகுதிகளிலும் அவரது பெயரில் யோகா கற்பிக்கும் மையங்கள் உருவாகி, யோகக் கலையைப் பரப்பிவருகின்றன.
புனே யோகக் கலை பயிற்சி மையத்தில் 95 வயதில் உடலை வில்லாக வளைத்து யோகாசனம் செய்த பிகேஎஸ் ஐயங்கார்.
பிகேஎஸ் தன் பெற்றோருக்குப் பிறந்த 13 குழந்தைகளில் 11-வதாகப் பிறந்தார். குடும்பத்தை வறுமை வாட்டியது. அவரது ஊரில் கடும் நோய்த் தொற்று பரவியதால் சிறு வயதில் அவருக்கு ஆஸ்துமா, செரிமானக் கோளாறு போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டன. கை, கால்கள் இயல்புக்கு மீறி மெலிந்திருந்தன.
அவருக்கு 5 வயதானபோது, குடும்பம் பெங்களூருவுக்குக் குடிபெயர்ந்தது. பிகேஎஸ் ஐயங்காரின் நெருங்கிய உறவின ரான கிருஷ்ணமாச்சாரியா, அப் போது மைசூர் சமஸ்தானத்தில் யோக குருவாக இருந்தார். அவர் பிகேஎஸ் ஐயங்காரை மைசூருக்கு அழைத்துச் சென்று யோகக் கலையை கற்றுக்கொடுத்தார். யோகம் பயிலும்போதே, பலவீன மான தன் உடல் பலமாவதை உணர்ந்தார்.
குருவின் ஆணைப்படி மகாராஷ்டிர மாநிலம் புனேவில் யோகக் கலைப் பயிற்சி மையத்தை 18 வயதில் தொடங்கினார். பதஞ்சலி யோக சூத்திரங்களுக்கான விளக் கங்கள், யோகக் கலையின் மேன்மை, யோகாசனத்தின் ஒளி, பிராணாயாமம் ஆகிய தலைப்பு களில் அவர் எழுதிய நூல்கள் சாமானிய மக்களிடமும் யோகக் கலையைக் கொண்டு சேர்த்தன.
எளிமையான பயிற்சி முறை
உடலை வருத்திக்கொள்ளும் பயிற்சியாக யோகா கருதப்பட்ட காலத்தில், அது எளிமையும் இனி மையும் கொண்ட அனுபவத்தைத் தரும் கலையே என்பதை அனைவ ருக்கும் புரியவைத்தார் பிகேஎஸ்.
தத்துவ மேதை ஜிட்டு கிருஷ்ண மூர்த்தி, ஜெயப்பிரகாஷ் நாராயண் உட்பட பல பிரபலங்களுக்கு யோகா பயிற்சி அளித்துள்ளார். பெல்ஜியம் ராணி எலிசபெத்துக்கு சிரசாசனம் கற்றுத் தந்தார். கிரிக்கெட் வீரர் சச்சின், இந்தி நடிகை கரினா கபூர் என மொத்தம் 4 தலைமுறைக்கு யோகா ஆசிரியராக இருந்த பெருமைக்கு உரியவர் பிகேஎஸ்.
விருதுகள், பெருமைகள்
பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்ம விபூஷண் விருதுகளை பெற்றிருக் கிறார். 2004-ம் ஆண்டின் செல் வாக்கு மிகுந்த 100 பேர் பட்டியலில் பிகேஎஸ் ஐயங்கார் பெயரை பிரபல ‘டைம்’ இதழ் குறிப்பிட்டது. சீன அரசு அஞ்சல் தலை வெளியிட்டு கவுரவித்துள்ளது.
- நாளையும் யோகம் வரும்..