‘காக்கா முட்டையும் கோழி முட்டையும்’ என்ற கட்டுரை அருமையான பதிவு! காக்கா முட்டை, கோழி முட்டை உணவு தொடங்கி… ஈசல் ஏன் உண்ணப்பட்டது, விளிம்புநிலை மக்களின் மாட்டிறைச்சி உணவுப் பழக்கம், ஊட்டச்சத்துக் குறைபாடுகளின் காரணமாக குழந்தைகள் மரணம் வரையிலான இக்கட்டுரையின் வரைபடம், இந்தியாவின் பல கோடி ஏழைக் குழந்தைகளுக்கு மறுக்கப்படும் உணவைக் கேள்விக்குள்ளாக்குகிறது.
ஆண்டுக்கு 13 லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் இறக்கிறார்கள் என்பதும் உணவு விளைவிக்கும் 3 லட்சம் விவசாயிகள் படுகொலை என்பதும் எத்தனை முரண். அதேபோல் குழந்தைகள் மரணம் அல்ல, படுகொலை! புதிய தாராளமயக் கொள்கைகளால் ஏற்பட்ட விவசாய அழிவு, தனியார்மயம், சமூக நலத்திட்ட நிதி வெட்டு போன்றவையே குழந்தைகளைப் படுகொலை செய்பவை.
- ஜ. வெண்ணிலா,சென்னை.