மற்றவை

எண்ணென்ப... இந்திய - வங்கதேச ஒப்பந்தம்

செய்திப்பிரிவு

41,649 கோடி ரூபாய்.

இந்தியா - வங்கதேசத்துக்கு இடையிலான வருடாந்திர வர்த்தக மதிப்பு. இதில் வங்கதேசத்துக்கு இந்திய ஏற்றுமதியின் மதிப்பு ரூ. 38,466 கோடி.

50,000

பிரதமர் மோடியின் வங்கதேசப் பயணத்தையொட்டிக் கையெழுத்தான எல்லை வரையறை ஒப்பந்தத்தின் மூலம் பயன்பெறவிருக்கும், வங்கதேச - இந்திய எல்லையில் குடியிருக்கும் மக்களின் எண்ணிக்கை. இதுவரை நாடற்றவர்களாகக் கருதப்பட்ட இம்மக்கள் பல துயரங்களை அனுபவித்தவர்கள்.

1,100

மெகாவாட். இன்னும் இரண்டு ஆண்டுகளில் வங்கதேசத்துக்கு இந்தியா வழங்கவிருக்கும் மின்சாரத்தின் அளவு. தற்போது 500 மெகாவாட் மின்சாரத்தை வங்கதேசத்துக்கு வழங்குகிறது இந்தியா.

12,800 கோடி ரூபாயை,

வங்கதேசத்துக்கு இந்தியா கடன் உதவித்தொகையாக வழங்குகிறது. அந்நாட்டின் கட்டமைப்புப் பணிகளுக்காக இந்தத் தொகை வழங்கப்படுகிறது.

50,000

வங்கதேசத்துக்குக் கடன் உதவி வழங்குவதன் மூலம், இந்தியாவின் வேலைச் சந்தையில் புதிதாக உருவாகும் என்று எதிர்பார்க்கப்படும் வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை.

7,000

மெகாவாட் மின்உற்பத்தி செய்தாலும் வங்கதேசத்தில், 1,500 மெகாவாட் மின்சாரப் பற்றாக்குறை இருக்கிறது.

4,600

மெகாவாட்-அதானி மற்றும் அம்பானி குழுமங்கள் இணைந்து வங்கதேசத்தில் தொடங்கவிருக்கும் மின்உற்பத்தி நிலையங்கள், உற்பத்தி செய்யவிருக்கும் மின்சாரத்தின் அளவு.

SCROLL FOR NEXT