மற்றவை

சிதம்பரம் நடராஜர் கோயில் தரிசன விழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

செய்திப்பிரிவு

சிதம்பரம் நடராஜர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று தரிசன விழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

சிதம்பரம் நடராஜர் கோயில் கும்பாபிஷேகம் 28 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 1-ம் தேதி நடைபெற்றது. ஒரே நேரத்தில் பொன்னம்பலம், சித்சபை, கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு ராஜகோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் தேரோட்டம் நடைபெற்றது.

நேற்று அதிகாலை ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாமிசுந்தரி அம்பாள் சமேத நடராஜருக்கு மகா அபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

மதியம் 2 மணி அளவில் ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து மேளதாளங்கள் முழங்கிட, தீப்பந்தங்கள் முன்னே செல்ல அசைந்து ஆடி நடராஜரும், சிவகாமசுந்தரி அம்பாளும் பக்தர்களுக்கு காட்சி அளித்தபடி சித்சபைக்கு சென்றனர்.

தரிசன விழாவை முன்னிட்டு இந்து ஆலய பாதுகாப்பு குழு சார்பில் சபேசன், ஜோதிகுருவாயூரப்பன் மற்றும் இலங்கையை சேர்ந்த சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் மற்றும் பலர் அன்னதானம் செய்தனர்.

SCROLL FOR NEXT