மற்றவை

அந்நிய களைச்செடிகளால் யானைகளுக்கு ஆபத்து: களைகளை அழிக்கும் திட்டம் தாமதத்தால் இடம்பெயர்வு அதிகரிப்பு

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மேற்கு தொடர்ச்சிமலை வனப்பகுதி யில் அந்நிய களைச்செடிகள் வேகமாக பரவுவதால் யானைகள் காடுகளைவிட்டு வெளியேறுவது அதிகரித்துள்ளதாக யானைகள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித் துள்ளனர்.

இந்தியாவில் மேற்கு தொடர்ச்சி மலை காடுகளில் யானைகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. 1997-ம் ஆண்டு நாட்டில் 25,842 யானைகள் இருந்துள்ளன. தற் போது 27,715 ஆக உயர்ந்துள்ளன. தமிழகத்தில் திண்டுக்கல், கிருஷ்ண கிரி, தருமபுரி, வேலூர், கோவை உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சிமலை மாவட்ட வனப்பகுதிகளில் யானை கள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.

இந்த மாவட்டங் களில் 1997-ம் ஆண்டு 2,971 ஆக இருந்த யானைகள் எண்ணிக்கை தற்போது 4,015 ஆக உயர்ந்துள்ளது. யானைகள் எண்ணிக்கை ஒருபுற மும் அதிகரித்து வருவது வரவேற் கத்தக்கதாக இருந்தாலும், மறு புறம் கடந்த 5 ஆண்டாக யானை கள் வழக்கத்துக்கு மாறாக காடுகளை விட்டு குடியிருப்பு பகுதி, ஆற்றங்கரைகள், வயல்வெளி களை நோக்கி இடம்பெயர்வது அதிகரித்துள்ளது கவலை அளிப் பதாக உள்ளது. இதற்கு, வனப்பகுதி யில் விவசாய நிலங்கள், கட்டிடங் கள் அதிகரிப்பு, உணவு, தண்ணீர் பற்றாக்குறை, வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு என பல்வேறு காரணங்கள் கூறப்பட்டன.

இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அதிகரித்த அந்நிய களைச்செடிகள் காரணமாகவே, யானைகள் இடம்பெயர்வு வழக்கத் துக்கு மாறாக அதிகரித்துள்ளதாக யானைகள் ஆராய்ச்சியாளர் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள் ளார்.

இதுகுறித்து மயிலாடுதுறை யானை ஆராய்ச்சியாளர் டாக்டர் என்.பாஸ்கரன் `தி இந்து'விடம் கூறியதாவது:

‘‘யானைகள் வசிக்கும் இடத்தில் மக்கள் தற்போது நிரந்தரமாக தங்கியதால், வருவாய் துறை, வனத்துறை நிலங்கள் விவசாய நிலங்களாயின. அந்த நிலங் களில் விவசாயிகள் பயிர் செய்ய ஆரம்பித்ததால் யானைகள் அதிகளவில் வரத்தொடங்கிவிட்ட தாக மாயத்தோற்றம் ஏற்பட்டுள்ளது.

வனப்பகுதி ஆக்கிரமிப்பு

அன்று மலைக்கிராமங்களில் பயிர் சாகுபடி முறை வேறு. இன்று பொருளாதார வளர்ச்சியால் மழைக்குத் தகுந்தமாதிரி பயிர் செய்ய ஆரம்பித்துவிட்டனர். முன்பு மலைக்கிராமங்களில் மலை வாழ் மக்கள் மட்டுமே வசித்தனர். அவர்கள் யானை சாப்பிட்டு போனது மீதிதான் நமக்கு என நினைத்தனர்.

இன்று வெளியில் இருந்தவர்கள், அங்கு குடியேறியதால் யானைகள் சேதத்தை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. 20, 30 ஆண்டுகளுக்கு இதுபோன்ற மீடியாக்கள் இல்லை. தற்போது மீடியாக்கள் பெருகிவிட்டதால், யானைகள் இடம்பெயர்வு செய்தி கள் அடுத்த நொடிப்பொழுதில் மக்களை சென்றடைகின்றன.

இயற்கை வளத்துக்கு இடையூறு

50, 60 ஆண்டுகளுக்கு முன் உதகை, கொடைக்கானல், சத்திய மங்கலம் உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைக்காடுகளில் தென் அமெரிக்காவில் இருந்து வெளிநாட்டினர் அலங்காரத்துக் காக கொண்டுவந்து நட்ட லேண் டானா காமிரா, ஈப்பட்டோரியம், வெட்டில், ஒடோட்டேரியம், பார்த் தீனியம் செடிகளை நட்டனர். தற்போது அந்தசெடிகள் உதகை, கொடைக்கானல், ஓசூர், ஒகேனக் கல், ஈரோடு மற்றும் கோவை உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை காடுகளில் எங்கு பார்த்தா லும் பரவிவிட்டது.

இந்த செடிகள் குத்து செடிகள் போல் காணப் படும். பறவைகள், விலங்குகள் இந்த செடிகளை சாப்பிடாது. அந்த செடிகள் வளர்ந்ததால் வனத்துறையில் இயற்கையாக இருக்கக்கூடிய தாவர உண்ணிகளுக்கான தாவரங்கள் வளர முடியவில்லை. எந்த ஒரு செடியும் வெளிநாட்டில் இருந்து கொண்டு வரும்போது ஒன்று அதிகமாக பரவிவிடும், அல்லது அழிந்து விடும்.

நடுத்தரமாக இருக்காது. அதனால், இந்த செடிகள் வளரும் இடங்களில் வன விலங்குகளும் இருக்காது. அதனால், யானைகள் தற்போது காடுகளைவிட்டு இடம் பெயர்வது சற்று அதிகரித்துள்ளது. இந்த செடிகள் பரவுவதை வனத் துறையினரால் கட்டுப்படுத்த முடிய வில்லை. இந்த செடிகளை அகற்ற முயற்சிகள் நடைபெறுகின்றன.

அதற்காக இந்த களைச்செடி கள் இருக்கும் இடத்தில் எந்த விலங்குகள் உள்ளன. இல்லாத இடத்தில் எந்தெந்த விலங்குகள் உள்ளன என்பதைப் பற்றிய ஆய்வுகள் நடைபெறுகின்றன. இந்த ஆய்வு மூலம் இந்த களைச் செடிகளை அப்புறப்படுத்தும் திட்டம் தாமதமாவதால் யானைகள் காடுகளைவிட்டு வெளியே வரு வதை தடுக்க முடியவில்லை’’ என்றார்.

SCROLL FOR NEXT