வட தமிழகத்தில் பல இடங்களில் மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப் புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக, கடந்த சில நாட் களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இதே போன்று அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழகம், புதுச்சேரியில் பல இடங்களில் மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். தென் தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது கிழக்கு திசையில் நகர்ந்துள்ளது. இது மேலும் வட கிழக்கு திசையில் நகர்ந்து வங்கதேசம், மியான்மர் நாடு களை அடையும். இதனால் தமிழகத்துக்கு பாதிப்பு இல்லை யென்றாலும் சென்னை, கடலூர், நாகப்பட்டினம், குளச்சல், ராமேஸ்வரம், பாம்பன், பாண்டிச்சேரி, தூத்துக்குடி உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு வியாழக்கிழமை ஏற்றப்பட்டது.
தமிழகத்தில் வியாழக்கிழமை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் 10 செ.மீ., மழை பெய்துள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் 7 செ.மீ., கிருஷ்ணகிரி மாவட்டம் சூலகிரியில் 6 செ.மீ., நீலகிரி மாவட்டம் தேவலாவில் 6 செ.மீ., கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை, தருமபுரியில் 5 செ.மீ, பரூரில் 4 செ.மீ. மழை பெய்துள்ளது.