ரியல் எஸ்டேட் துறையில் குவைத்தைச் சேர்ந்த ஹயாத் இன்வெஸ்ட் கோ நிறுவனம் நுழையத் திட்டமிட்டுள்ளது. இதற்காக இந்நிறுவனம் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் எக்ஸ்எஸ் ரியல் குழும நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தம் மூலம் 12 கோடி டாலரை (ரூ. 750 கோடி) ஹயாத் இன்வெஸ்ட் கோ நிறுவனம் கட்டுமானத் துறையில் முதலீடு செய்ய உள்ளது.
சமீப காலங்களில் கட்டுமானத் துறையில் (ரியல் எஸ்டேட்) மிக அதிக அளவிலான அன்னிய நேரடி முதலீடு இதுவாகும்.
ஹயாத் இன்வெஸ்ட் கோ நிறுவனத்தின் அங்கமாக விளங்குவதோடு முதலீடுகளை மேற் கொள்ளும் அரிஸ்டான் ஹயாத் ஆர்இ நிறுவனம் இந்த முதலீடுகளை மேற்கொள்கிறது. இந்நிறுவனம் மொரீஷியஸிலிருந்து செயல்படுகிறது.
எக்ஸ்எஸ் ரியல் குழும நிறுவனம் சிறுசேரி அருகே 15 லட்சம் சதுர அடி பரப்பளவில் மிகப் பெரிய கட்டுமான திட்டத்தை நான்கு ஆண்டுகளில் கட்டி முடிக்கத் திட்டமிட்டுள்ளது. ஸ்பெயின் கட்டிட வியல் வல்லுநர்களின் வடிவமைப்பில் இந்த உயர் ரக குடியிருப்புகள் கட்டப்பட உள்ளன.
மத்திய கிழக்கு நாடுகள் தவிர்த்து இப்போது முதல் முறையாக இந்தியாவில் கட்டுமான பணி களை மேற்கொள்கிறது ஹயாத் இன்வெஸ்ட் கோ நிறுவனம்.