சாலையிலேயே இயங்கும் நியாய விலை கடையால், அண்ணாநகர் பகுதி பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி உள்ளனர்.
சென்னை, அண்ணாநகர் கிழக்கு, ’எல்’ பிளாக்-21-வது தெருவில் டி8-017 என்ற எண் கொண்ட சிந்தாமணி கூட்டுறவு நியாய விலைக் கடை அமைந்துள் ளது. இந்த நியாய விலைக் கடை, அண்ணாநகர் கிழக்கு- குஜ்ஜி தெரு பகுதிவாசிகளுக்காக இயங்குகிறது.
சாலையோரத்தில் 40 சதுரடிக் கும் குறைவான அறையில் இந்த நியாய விலைக் கடை இயங்கு வதால், இந்த கடையின் 1500 கார்டு தாரர்கள் சாலையில் நின்றுதான் அரிசி, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருட்களை வாங்க வேண்டியுள்ளது.
அதோடு நியாயவிலைக் கடை யின் விற்பனையாளர், கடைக்கு வெளியே உள்ள படிக்கட்டில் மேஜை, நாற்காலி போட்டு அமர்ந்துதான் பொருட்கள் விநியோ கிப்பதற்கு ரசீதுகளை கார்டுதாரர் களுக்கு வழங்கவேண்டியுள்ளது. இதனால், போக்குவரத்து நெரி சலும், வரிசையில் நிற்போர் விபத் தில் சிக்கும் அபயாமும் தொடர்ந்து வருகிறது.
இது குறித்து குஜ்ஜி தெருவைச் சேர்ந்த முனியன் கூறியதாவது:
கடந்த மூன்றாண்டுகளுக்கு மேலாக, ’எல்’- பிளாக்கில் வாடகை கட்டிடத்தில் குறுகிய அறையில், சாலையோரத்தில் இந்த கடை இயங்குகிறது.
இதனால் சாலையில், மழை வெயிலில் நின்றபடி பொருட் களை பொதுமக்கள் வாங்கவேண்டி யுள்ளது.
அதுமட்டுமல்லாமல் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகையின் போது விலையில்லா வேட்டி, சேலை உள்ளிட்ட பொருட்கள், இந்த நியாய விலைக் கடையில் விநியோகிக்கப்படும் போது, சாலையில் போக்குவரத்து நெரி சல் அதிகரிக்கிறது. எனவே, நியூ ஆவடி சாலையை ஒட்டி, குஜ்ஜி தெருவில் உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தில் புதிய கட்டிடம் கட்டி, அங்கு இக்கடையை மாற்றவேண்டும்.
இவ்வாறு முனியன் தெரி வித்தார்.
அண்ணாநகர் கிழக்கு, ’எல்’ பிளாக் சிவிக் எக்ஸ்னோரா செயலர் பாலமுருகன் கூறுகையில், “குஜ்ஜி தெரு மற்றும் அதனையொட்டி யுள்ள பகுதிகளுக்கான நியாய விலைக்கடையை, அப்பகுதிக்கு சம்பந்தமே இல்லாத, ‘ எல்’ பிளாக்கில் அமைத்திருப்பதால், குஜ்ஜி தெரு வாசிகளுக்கும், ’எல்’ பிளாக் வாசிகளுக்கும் பல்வேறு இன்னல்கள் ஏற்படுகிறது.
சாலையோரத்திலுள்ள இந்த கடைக்கு வரும் பொதுமக்கள் சாலையில் நின்று பொருட்கள் வாங்கவேண்டிய நிர்ப்பந்தத்தால் 30 அடி சாலையின் பெரும் பகுதி ஆக்கிரமிக்கப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், நியூ ஆவடி சாலை உள்ளிட்ட பிரதான சாலைகளுக்கு செல்லமுடியாமல் சிரமப்படுகிறார் கள்” என்றார்.
இதுகுறித்து, பூங்காநகர் கூட்டு றவு மொத்த விற்பனை பண்டக சாலை அதிகாரி ஒருவர் கூறுகை யில், “குஜ்ஜி தெரு நியாய விலை கடைக்கு தேவையான இடம் கிடைக்காததால், ’எல்’ பிளாக்கில், சாலையோரத்தில் சிறு அறையில் இயங்குகிறது.
அக்கடையால் பொதுமக் களுக்கு ஏற்படும் இன்னல்களை உணர்ந்ததால், அக்கடையை வேறு இடத்துக்கு மாற்றுவதற்கான நடவடிக்கையில் இறங்கி வருகிறோம்” என்றார்.