மற்றவை

நாமக்கல்: ஊஞ்சலாடுகிறது பிரம்பு தொழிலாளர்களின் வாழ்க்கை... <br/>சாலையோரத்தில் குடும்பம் நடத்தும் அவலம்

கி.பார்த்திபன்

வீடுகளை அலங்கரிக்கும் பிரம்பு நாற்காலிகளைத் தயாரிக்கும் தொழிலாளிகள் பல்லாண்டுகளாக பாடுபட்டாலும், வாழ்க்கைத் தரம் உயராமல் சாலையோரத்திலேயே குடும்பம் நடத்தும் பரிதாபச் சூழல் நிலவுகிறது. நாற்காலிகள் செய்வதில் கூலித் தொகை மட்டுமே மிஞ்சுவதாக இத்தொழிலில் ஈடுபடுவோர் தெரிவிக்கின்றனர்.

வீடுகளின் உள் அலங்காரத்தில் முக்கியப் பங்குவகிப்பவை இருக்கைகள். குறிப்பாக, பிரம்பால் தயார் செய்யப்படும் இருக்கைகள் பழமை மாறாமல் காட்சியளிப்பதுடன், வீட்டின் அழகையும் அதிகப் படுகிறது. ஆந்திர மாநில த்தைச் சேர்ந்தவர்கள் குடிசைத் தொழிலைப்போல் பிரம்பிலான இருக்கைகளைத் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். பிரம்பு நாற்காலிகள், அவற்றின் அளவுக்குத் தகுந்தாற் போல் பல்வேறு விலைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. அதிகபட்சமாக ரூ.15 ஆயிரம் வரை இவை விற்கப்படுகின்றன.

ஆனால், பிரம்பு இருக்கைகளால் கிடைக்கும் வருமானம், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வில்லை. பிரம்பு நாற்காலிகள் செய்வதில் கூலியே மிஞ்சுவதாக இந்தத் தொழிலில் ஈடுபடுவோர் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து ஆந்திராவைச் சேர்ந்த தொழிலாளர்கள் கூறியது: வட மாநிலங்களான அசாம், ஜார்க்கண்ட் போன்ற இடங்களிலிருந்து பிரம்பு நாற்காலிகள் செய்வதற்குத் தேவையான மூலப் பொருள்கள் வாங்கி வரப்படுகின்றன.

ஒரு சோபா செட் ரூ.15 ஆயிரம் வரை விற்பனை செயப்படுகிறது. அதுபோல் அனைத்து வகை நாற்காலிகளும், அவற்றின் அளவுக்குத் தகுந்தாற்போல் விலை நிர்ணயம் செய்யப் படுகிறது. சாலையில் வைத்து விற்பனை செய்வதால், அவற்றை வாங்குவோர் விலையைக் குறைத்து வாங்குகின்றனர். நாற்காலி செய்வதில் எங்களுக்கு கூலி மட்டுமே மிஞ்சுகிறது. குடும்பத்துடன் இந்தத் தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். எனினும், வாழ்க்கைத் தரம் மட்டும் உயரவேயில்லை என்றனர்.

கடனுதவி

நாமக்கல் மாவட்ட தொழில் மைய மேலாளர் ராசு கூறுகை யில், மானியக் கடன் பெற இருப்பிடம் உள்ளிட்ட விவரங்கள் தேவைப்படும். இந்த விவரங்களை அளித்தால்தான், வங்கிக் கடனுதவி கிடைக்கும். அதேசமயம், பிரம்பு நாற்காலி செய்வோருக்கு கடனுதவி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கொடுத்த கடனை முறையாகச் செலுத்துவதாக உறுதியளித்தால், தேவையான கடனுதவி வழங்கப்படும். அவர்கள் ரேஷன் கார்டு வைத்திருந்தால், வங்கிக் கடனுதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்றார்.

SCROLL FOR NEXT