மற்றவை

கலாச்சார சீரழிவை நோக்கிச் செல்லும் கோவை!- வெளி மாநில மாணவர்களால் நேரும் அவலம்

கா.சு.வேலாயுதன்

மரியாதை, பண்பாட்டுக்கு பெயர்போன கோவை, இன்று கலாச்சார சீரழிவில் திணறுகிறது. வெளி மாநிலங்களி லிருந்து வந்து தங்கிப் படிக்கும் ஒருசில கல்லூரி மாணவர்களின் செயல்கள் அருவருக்கத்தக்க வகையில் உள்ளன. இதை உறுதிப்படுத்தும் வகையில் சக மாணவி கொடுத்த பாலியல் புகாரின் பேரில் கேரள மாணவர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவை புறநகர் பகுதியில் உள்ள ஒரு புகழ்பெற்ற தனியார் பல்கலையில் இளங்கலை முதலாமாண்டு படித்து வரும் 19 வயது மாணவி கடந்த 23-ம் தேதி சொந்த வேலையாக சென்னை சென்றுவிட்டு கோவை திரும்பியிருக் கிறார். ரயில் நிலையத்தில் வந்திறங் கிய அந்த மாணவியை அதே கல் லூரியில் இரண்டாமாண்டு படிக்கும் அகில், அதுல் (20) என்ற இரு மாணவர்கள் (இருவரும் சகோதரர்கள்) தங்களது சொந்தக் காரில் அழைத்துச் சென்றுள்ளனர். வழியில் மாணவியுடன் காலைக் காட்சி திரைப்படம் பார்த்துள்ள னர். பிறகு அங்கிருந்து 12 கி.மீ. தொலைவில் அவர்கள் தங்கியிருக்கும் துடியலூர் வீட்டுக்கு அந்த மாணவியை அழைத்துச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் கடந்த 28-ம் தேதி, அந்த மாணவர்கள் இருவரும் தனக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த தாக துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அந்த மாணவி புகார் கொடுத்துள்ளார். இதில் மயக் கத்தில் இருந்த மாணவியை செல் போனிலும் படம் எடுத்துள்ளதாகக் கூறப் படுகிறது. புகாரின் பேரில் சகோதரர் கள் இருவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர். இதில் பாதிக்கப் பட்ட மாணவியின் தந்தை துபாயில் பணிபுரிகிறார். குற்றம் சாட்டப்பட்ட மாணவர்களின் தந்தை தென் ஆப்பிரிக் காவில் உள்ளார். இரண்டு குடும்பங் களுமே கேரளத்தை பூர்வீகமாகக் கொண்டவை. இந்த விவகாரத்தில் மாணவி காவல்துறையில் உயர் பொறுப் பில் இருந்தவருக்கு நெருக்கமான உறவினர் என்பதால் காவல்துறையின் முக்கிய அதிகாரிகள் கூடுதல் அக் கறையுடன் விசாரித்து நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தொடர்கதை சம்பவங்கள்

இதுபோன்ற சம்பவங்கள் இன்று நேற்றல்ல; நீண்ட காலமாகவே கோவை யில் நடந்து வருகின்றன. காரணம் பெற்றோர் வெளிநாடுகளில் கைநிறைய சம்பாதிக்கின்றனர். தங்களது பிள்ளை கள் நல்ல கல்லூரிகளில் படிக்க வேண்டும் என்ற நோக்கில் அவர்களை கோவை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கல்லூரிகளில் கேட் கும் நன்கொடைகளை கொடுத்து சேர்க் கின்றனர். மாணவர்களுக்கும் கை நிறைய பணம் கொடுக்கின்றனர். இவ் வாறு பணம் புரளும் ஒருசில மாணவர் கள், விடுதியில் உள்ள இதர மாணவர் களையும் சேர்த்துக்கொண்டு தீய பழக்க வழக்கங்களுக்கு ஆட்படுகின்றனர்.

அவர்களின் முறைகேடான செயல் கள் வெளியே தெரியவரும்போது அவை மறைக்கப்பட்டு விடுகின்றன. புகார்களாக வந்தாலும் வழக்குகளாகப் பதியப்படுவது இல்லை. மாறாக புகார் கொடுக்கும் இடங்களிலேயே கட்டப் பஞ்சாயத்து பேசி முடித்துவைக்கப் படுகிறது. இந்த கலாச்சார சீர்குலை வுக்கு யார் கடிவாளம் போடுவது?

வெளி மாநிலங்களிலிருந்து வந்து கல்லூரி விடுதி, தனியாக வீடு எடுத்து தங்கும் மாணவர்கள் கல்லூரிக்கு வெளியே செய்யும் அநாகரிக செயல் களுக்கு அளவேயில்லை. வெளி மாநில மாணவர்களின் இந்த அத்துமீறிய செயல்களைப் பார்த்து உள்ளூர் மாணவ, மாணவிகளும் தவறான பாதைக்குப் போய் விடுவார்களோ என்று பெற்றோர்கள் அச்சமடைந்துள்ளனர்.

7 லட்சம் மாணவர்கள்

இதுகுறித்து கல்லூரி பேராசிரியர் ஒருவர் கூறியதாவது: கோவை மற்றும் அதைச் சுற்றியுள்ள கலை அறிவியல், பொறியியல் கல்லூரிகள் என சுமார் 125 உள்ளன. இதில் 7 லட்சம் பேர் படிக்கின்றனர். இவர்களில் 30 சதவீதம் பேர் கேரளத்தைச் சேர்ந்த வர்கள். 5 சதவீதம் மணிப்பூர் உள்பட இதர மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இந்த 35 சதவீதம் பேரின் பெற்றோரில் 95 சதவீதம் பேர் வெளிநாட்டில் வசிக் கின்றனர். நன்கொடை தாராளமாகத் தர முன்வருவதால் அவர்களை சேர்ப்பதில் கல்லூரிகள் ஆர்வம் காட்டுகின்றன. இதுபோன்ற மாணவர்கள்தான் கல்லூரி வளாகத்திலேயே அநாகரிகச் செயல் களில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன. எல்லாவற்றுக்கும் மேலாக கல்லூரிப் பேராசிரியர்களை மிரட்ட கூலிப் படை களை அழைத்துவந்த செயல்களும் அரங்கேறின. காலப்போக்கில் மாணவர் களின் ஒழுங்கீனத்தை பார்த்த பல கல் லூரிகள், வெளி மாநில மாணவர்களைச் சேர்ப்பதை வெகுவாகக் குறைத்து விட்டன. எனவே இப்போது இவர்களை ஈர்க்கும் நோக்கில் கேரள எல்லையான எட்டிமடை, க.க.சாவடி, பேரூர், நவக் கரை பகுதிகளில் ஏராளமான கல்லூரி கள் உருவாகியிருக்கின்றன.

இதுகுறித்து பீளமேடு பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பணியாற்றும் அலுவலர் ஒருவரிடம் கேட்டோம்:

“கல்லூரி விடுதியில் தங்கும் மாண வர்கள், வசதி குறைவு என்று பெற்றோரி டம் சொல்லிவிட்டு சில மாணவர்கள் ஊருக்கு ஒதுக்குப்புறமாக வீடு எடுத்து தங்குகின்றனர். பின்னர் பல கெட்ட பழக்கங்களுக்கு ஆளாகின்றனர். இவர் கள் செய்யும் தவறுகள் கல்லூரிக்கு தெரியவந்தால் பெற்றோரை அழைத்து வருமாறு கூறுகின்றனர். தகவல் தெரி வித்தாலும் பெற்றோர் வருவதில்லை. கல்லூரி நிர்வாகம் நெருக்குதல் அளித் தால், பெற்றோரைபோல் நடிக்க வைக்க, பணம் கொடுத்து வேறு யாரையாவது அழைத்து வருகின்றனர்” என்றார்.

பெற்றோரும் காரணம்

ஏ.ஜே.கே கல்லூரி செயலர் லால்மோகன் அஜித்குமார் கூறியபோது, “துடியலூரில் நடந்திருக்கும் சம்பவம், கல்லூரி வளாகத்தை விட்டு வெளியே மாணவர்கள் தங்கியிருந்த வீட்டில் நடந்திருக்கிறது. அதை கல்லூரி நிர்வாகம் தட்டிக்கேட்க முடிவதில்லை. காரணம், 5 மணிக்கு கல்லூரியை விட்டு சென்ற மாணவர்கள் தப்பு செய்வது தெரிந்து கேட்டால், ‘அது எங்க பர்சனல் பிரச்சினை… நீங்க தலையிடாதீங்கன்னு’ சொல்றாங்க. கல்லூரி விடுதிகளை விட்டு வெளியே மாணவர்கள் தங்குவதை பெற்றோர் அனுமதிப்பதை தவிர்த்தாலே பாதி பிரச்சினைகள் தீர்ந்துவிடும். பெற்றோர் மீதும் குறைகள் உள்ளன” என்றார்.

SCROLL FOR NEXT