மேற்கு சைதாப்பேட்டை பகுதியில் பஸ்கள் குறித்த நேரத்தில் இயக்கப் படுவதில்லை. இதனால் எங்கு சென் றாலும் தாமதமாக செல்ல வேண்டிய நிலை உள்ளது என்று பொதுமக்கள் புகார் தெரிவித் துள்ளனர்.
சென்னையின் முக்கிய இடங் களான தி.நகர், அசோக் பில்லர், அண்ணா சாலை ஆகியவற்றிற்கு இணைப்பு பகுதியாக மேற்கு சைதாப்பேட்டை உள்ளது. சி.ஐ.டி. நகர், மேற்கு மாம்பலம், மேட்டுப் பாளையம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய மேற்கு சைதாப் பேட்டை வழித்தடத்தில் 18K, 5E, 88D உள்ளிட்ட பேருந்துகள் தினசரி வந்து போகின்றன.
இந்த வழித்தடத்தில் இயக்கப் படும் பேருந்துகள் சரியான முறையில் இயக்கப்படுவதில்லை என்று அப்பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர்.
நகரின் மற்ற பகுதிகளைப் போல் மேற்கு சைதாப்பேட்டையில் பள்ளிகள், கல்லூரிகள், அலுவல கங்கள் அதிகளவில் கிடையாது. எனவே இப்பகுதியில் வசிக்கும் பல்லாயிரக்கணக்கான நடுத்தர வர்க்கத்தினர் தங்களது அன்றாட வேலைகளுக்காகவும், படிப்பிற்கா கவும் வேறு பகுதிகளுக்குத்தான் செல்ல வேண்டும்.
இப்பகுதியிலுள்ள பெரும்பாலா னோர் பயணத்திற்காக மாநகரப் பேருந்துகளையே பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் இந்த வழித்தடத்தில் சரியான முறையில் பேருந்துகள் இயக்கப்படுவதில்லை என்று சொல்லப்படுகிறது.
இதுகுறித்து மேற்கு மாம்பலத்தை சேர்ந்த ஈஸ்வரி என்னும் கல்லூரி மாணவி கூறுகையில், “நான் எஸ்.ஐ.இ.டி. கலை அறிவியல் கல்லூரியில் படித்து வருகிறேன்.
மதிய சிஃப்ட் கல்லூரி என்பதால், நானும் 15-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளும், தினமும் மதியம் 12 மணியளவில் பேருந்துக்காக காத்திருப்போம். அப்போது, ஒரு மணி நேரம் ஆனாலும் பேருந்துகளே வருவது கிடையாது. இதனால் பலமுறை கல்லூரிக்கு தாமதமாக செல்ல நேரிடுகிறது. எனவே இந்த வழித்தடத்தில் குறித்த நேரத்தில் பேருந்துகளை இயக்க வேண்டும் என்றார்.
இதேபோல் மேட்டுப்பாளை யத்தை சேர்ந்த ராமன் என்பவர் கூறுகையில், “நான் மேட்டுப்பாளை யம் மார்க்கெட்டில் மளிகை கடை வைத்துள்ளேன். பொருட்களை வாங்குவதற்காக சென்னை சென்ட்ரல் மற்றும் அடையாறு உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் சென்று வருகிறேன். வெளியில் செல்ல பேருந்துகளைத்தான் நம்பி யுள்ளேன். இந்த வழித்தடத்தில் காலை 10 மணிக்கு மேல் பேருந்து களே வருவதில்லை. அப்படியே வந்தாலும் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை 2, 3 பேருந்துகள் தொடர்ச்சியாக வருகின்றன. அண்ணா சாலைக்கும் மிக அருகில் இருக்கும் இந்த வழித்தடத்தில் நாள் முழுவதும் குறித்த நேரத்தில் முறையாக பேருந்துகளை இயக்க வேண்டும் என்றார்.
இதுகுறித்த மாநகர போக்கு வரத்துத் துறையின் மூத்த அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “இது மாதிரியான குற்றச்சாட்டுகள் அவ் வப்போது வந்துகொண்டு இருக் கின்றன.
எங்கள் கவனத்திற்கு வருகிற போது அதுபற்றி விசாரித்து முறை யான நடவடிக்கை எடுத்து வரு கிறோம். மேற்கு சைதாப்பேட்டை பகுதியில் பேருந்து இயக்கத்தை சீர்படுத்த விரைவில் நடவடிக்கை எடுப்போம்” என்றார்.
இந்த வழித்தடத்தில் காலை 10 மணிக்கு மேல் பேருந்துகளே வருவதில்லை. அப்படியே வந்தாலும் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை 2, 3 பேருந்துகள் தொடர்ச்சியாக வருகின்றன.