மற்றவை

புதிய பிரிவில் வருமானம் அதிகரிக்கும்

செய்திப்பிரிவு

ஐ.டி. துறையில் முன்னணியில் இருக்கும் நிறுவனமான காக்னிசென்ட், எஸ்.எம்.ஏ.சி. (social, mobility, cloud and analytics) பிரிவில் 500 மில்லியன் டாலர் வருமானம் எதிர்பார்ப்பதாக சொல்லி இருக்கிறது.

கிரெடிட் சூஸ் நிறுவனம் நடத்திய 2013-ம் ஆண்டுக்கான தொழில்நுட்பக் கருத்தரங்கில் காக்னிசென்ட் நிறுவனத்தின் தலைமை நிதி அலுவலர் காரென் மெக் லாப்லிங் (Karen McLoughlin) இந்த தகவலை தெரிவித்தார்.

இந்த புதிய பிரிவு நல்ல வளர்ச்சி அடைந்து வருவதாகவும், சந்தையில் நல்ல வரவேற்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் இந்த துறையில் வளர்ச்சி நாங்கள் எதிர்பார்த்தை விட அதிகமாக இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT