மற்றவை

மல்ட்டிபிள் பாலிடிக்ஸ் டிஸ்ஆர்டர்!

எஸ்.எஸ்.பூங்கதிர்

அந்நியன் படத்தில் ரூல்ஸ் ராமானு ஜம் கேரக்டரில் அந்நியன், ரெமோ என்ற பர்சனாலிட்டிகள்தான் மாறிமாறி வந்துபோவார்கள். இது மல்ட்டிபிள் பர்சனாலிட்டி டிஸ் ஆர்டர். நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு சூழ்நிலையிலும் தின மும் பல்வேறு அரசியல் கட்சிகளாக அவதாரம் எடுத்துக் கொண்டிருக்கிறோம். அதுதான் மல்ட்டிபிள் பாலிடிக்ஸ் டிஸ்ஆர்டர்!

#விற்கும் விலைவாசியில் குடும்பம் நடத்த போராடுவதால்.. ஆம் ஆத்மி

#இல்லத்தரசி முடிவுக்கெல்லாம் தலையாட்டும்போது.. காங்கிரஸ்

#வீட்டுப் பெரியவர்கள் முடிவை ஒதுக்கித்தள்ளும்போது.. பா.ஜ.க

#சிக்கலில் மாட்டிக்கொண்டு முழிக்கையில்..

ராஷ்ட்ரிய ஜனதா

#ஆடம்பர செலவு செய்துவிட்டு கையை பிசையும்போது.. சமாஜ்வாடி

#தடாலடியாக முடிவெடுத்து தடுமாறி நிற்கையில்.. திரிணாமுல்

#சொந்த வீடு கட்டப்போய் பாதியில் விழிபிதுங்கி நிற்கும்போது..தேசியவாத காங்.

#கடன் கேட்டு கையேந்தி அலையும்போது.. கம்யூனிஸ்ட்கள்

#அம்மா பேச்சை கேட்டே ஆகவேண்டும் என்ற சூழலில்.. அதிமுக

#சொந்த பந்த உறவுகளால் மாறி மாறி பிரச்சினை எனும்போது.. திமுக

#பிள்ளைகள் அட்மிஷனுக்கு நடையாய் நடக்கும்போது.. மதிமுக

#அடிக்கடி முடிவுகளை மாற்றி எடுக்கும்போது.. பாமக

#நம்முடன் இருப்பவர்கள் நம்மைவிட்டுப் போகும்போது.. தேமுதிக

#வேறு வழியின்றி ஒரே இடத்தில் சகித்துக்கொண்டு வாழும்போது..விடுதலை சிறுத்தைகள்

SCROLL FOR NEXT