மற்றவை

தீபாவளி மலர் 2018 - சிறப்பம்சங்கள்

செய்திப்பிரிவு

ஆறாவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் ‘இந்து தமிழ்‘ நாளிதழின் ‘தீபாவளி மலர் 2018’ ரசனையோடு படித்து மகிழவும், பாதுகாத்து வைக்கவும் கூடிய படைப்புகளைக் கொண்டிருக்கிறது.

விநாயகர் வழிபாடு, தமிழக மலைக்கோயில்கள் குறித்து ஆன்மிகப் பகுதிக் கட்டுரைகள் விரிவாக அலசுகின்றன. சுவாமி விவேகானந்தரின் சிகாகோ உரையின் 125-வது ஆண்டில், அந்த உரையின் முக்கியத்துவத்தை மற்றொரு கட்டுரை பேசுகிறது.

தமிழ்த் திரையுலகின் பிரபல பாடலாசிரியர்கள்-கவிஞர்களான, பழனிபாரதி, தாமரை, யுகபாரதி, வே.ராமசாமி, ஏகாதசி,மோகன் ராஜன் ஆகியோரின் கவிதைகள், புதுப் புது வண்ணங்களை வரைந்து காட்டுகின்றன.

முன்னணி எழுத்தாளர்களான சுபா, ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், இந்துமதி, தேவிபாலா, மேகலா சித்ரவேல் உள்ளிட்டோரின் கதைகள் இந்த மலருக்கு அர்த்தமுள்ள வகையில் கனம் சேர்க்கின்றன.

தமிழ் சினிமாவில் நாயகர்களின் ஆதிக்கத்தைத் தாண்டி பல நாயகிகள் சாதித்திருக்கிறார்கள். பானுமதி முதல் சிம்ரன்வரை கடந்த நூற்றாண்டில் சாதித்த 10 நாயகிகளைப் பற்றிய சித்திரங்களைத் தருகின்றன, சினிமாப் பகுதிக் கட்டுரைகள்.

தமிழகத்தின் சில ஊர் பெயர்களைச் சொன்ன உடனேயே, அந்த ஊர்களின் அடையாளமாக மாறிவிட்ட தொழில்கள் நம் நினைவுக்கு வரும். அந்த வகையில் சிவகாசி, திருப்பூர் பற்றி மட்டுமல்லாமல் மார்த்தாண்டம், நாகப்பட்டினம் போன்ற ஊர்களும் குறிப்பிட்ட சில தொழில்களை மையமாகக் கொண்டு வளர்ந்துள்ளதை ‘ஊரும் தொழிலும்’ பகுதிக் கட்டுரைகள் அலசுகின்றன.

தீபாவளியில் சமைத்து மகிழ்வதற்கென்றே சிறப்பு சமையல் குறிப்புகளை சர்வதேச விருது பெற்ற செஃப் உமா சங்கர் வழங்கியுள்ளார்.

 தீபாவளி மலரை ஆன்லைனில் வாங்க க்ளிக் செய்க: தீபாவளி மலர் 2018

SCROLL FOR NEXT