தருமபுரி மாவட்டம், கடகத்தூரை சேர்ந்தவர் ராமமூர்த்தி (64). இவர் சில ஆண்டுகளாக பக்கவாத நோயால் அவதிப்பட்டு வந்தார்.
இதனால், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம், பலமநேர் அருகே உள்ள விருப்பாட்சிபுரத் தில் நாட்டு மருத்துவம் பார்த்துக் கொள்ள இவரது அக்கா லட்சுமி (67), லட்சுமியின் மகன் சேகர் (45), ராமமூர்த்தியின் 2வது மகன் மோகன்குமார் (34) மற்றும் உறவினர் ரங்கப்பா (65) ஆகிய 5 பேரும் நேற்று காலை 5 மணியள வில் காரில் பலமநேர் வந்தனர்.