மற்றவை

ஜம்மு-காஷ்மீர் புதிய ஆளுநராக சத்யபால் மாலிக் நியமனம்

செய்திப்பிரிவு

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புதிய ஆளுநராக சத்யபால் மாலிக் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ஆளுநராக பதவி வகித்து வந்த என்.என். வோராவுக்குப் பதிலாக புதிய ஆளுநராக சத்யபால் மாலிக் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுநாள் வரை சத்யபால் மாலிக் பிஹார் மாநில ஆளுநராக இருந்தார்.

பிஹார் மாநில புதிய ஆளுநராக லால்ஜி டாண்டன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஹரியாணாவின் புதிய ஆளுநராக சத்யதேவ் நாராயண் ஆர்யா நியமிக்கப்பட்டுள்ளார்.

உத்தராகண்ட் ஆளுநராக பேபி ராணி மவுர்யா நியமிக்கப் பட்டுள்ளார். ஹரியாணா மாநில ஆளுநராக இருந்த கப்தான் சிங் சோலங்கி, திரிபுரா ஆளுநராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

திரிபுராவில் ஆளுநராக இருந்த தத்தகத்தா ராய், மேகாலயா மாநில ஆளுநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேகாலயா மாநில ஆளுநராக இருந்த கங்கா பிரசாத், சிக்கிம் மாநிலத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.

SCROLL FOR NEXT