‘நேசிக்கும் எந்த ஒரு உயிருக்கும் உணவளிக்கும்போது கிடைக்கும் மனதிருப்திக்கு அளவே இல்லை’ என்கிறார் 45 ஆண்டுகளாக புறாக் களை வளர்த்து வரும் திருச்சி பீம நகரைச் சேர்ந்த ஜெகதீசன்.
தனது வீட்டின் மொட்டை மாடியில் 150-க்கும் அதிகமான எண்ணிக்கையில் இருந்த புறாக்க ளுக்கு மத்தியில் ‘தி இந்து’விடம் ஜெகதீசன் பகிர்ந்து கொண்டது:
போர் முனையில் ஆபத்தில் சிக்கியிருக்கும் படையினர், தலைமையகத்துக்கு தகவல் தெரிவிக்க பயிற்சி பெற்ற புறாக்களைப் பயன்படுத்தினர். போர் நடக்கும் வான்வெளியில் புறாக்கள் பறந்தாலே எதிரி நாட்டு வீரர்கள் அதைச் சுட்டு வீழ்த்தி விடுவது வழக்கம். முதல் உலகப்போரில் பிரான்சுக்கு ஆதரவாக அமெரிக்க துருப்புகள் ஜெர்மனுக்கு எதிராக போரிட்டது. 1918-ம் ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி, ஜெர்மன் படையால் சூழப்பட்ட அமெரிக்க வீரர்கள் 194 பேர் உதவி கேட்டு புறாக்களை தலைமையகத்துக்கு தூது அனுப்பினர்.
முதலில் அனுப்பட்ட புறா எதிரிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டது. தொடர்ந்து 2-வதாக அனுப்பிய புறாவும் வீழ்த்தப்படவே மூன்றா வதாக ‘செர்அமி’ என்ற புறாவை மேஜர் சார்லஸ் பறக்கவிட்டார். இரண்டு புறாக்கள் போலவே செர்அமியும் சுடப்பட்டது. ஒரு காலில் அடிபட்ட மற்றும் ஒரு கண்ணில் குண்டு துளைத்த நிலை யிலும் 25 மைல் தூரத்தை 65 நிமிடத்தில் கடந்து தலைமை யகத்தை அடைந்தது அது. செர்அமியின் மற்றொரு காலில் கட்டப்பட்டிருந்த சங்கேத எழுத் துகள் மூலம் தகவலை தெரிந்து கொண்டு, ஆபத்தில் இருந்த 194 வீரர்கள் காப்பாற்றப்பட்டனர்.
உயிருக்குப் போராடிய செர்அமிக்கு மருத்துவ குழு சிகிச்சை அளித்து பராமரித்து வந்த நிலையில், எட்டு மாதம் கழித்து செர்அமி 1919-ம் ஆண்டு ஜூன் 13-ம் தேதி இறந்தது. அமெரிக்க வீரர்கள் மத்தியில் செர்அமி இன்றைக்கும் ஹீரோதான். இறந்த செர்அமியின் உடலை பதப் படுத்தி அமெரிக்காவில் உள்ள ஸ்மித் சோனியன் தேசிய அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மனிதர்களுடன் மிகவும் நெருங்கி பழகும் புறாக்களில் பல வகை உண்டு. ஹோமர், உருளி, நாட்டிய, படாங்கு, மோர்னிங், கிங், கிரௌன்ட், கிரீன், சார்டின், பிரில் என பட்டியல் நீண்டுகொண்டே போகும். இதில் ஹோமர் புறா மட்டுமே மன்னர் காலத்திலும், முதல் உலகப் போர் முனையிலும் தகவல் பரிமாற்றத்துக்கு பயன் பட்டுள்ளது. மணிக்கு 90 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் இந்த ஹோமர் ரக புறாக்களை ஆர்வமுடன் வளர்க்கும் பலருக் காக, ஆண்டுதோறும் திருச்சி ரேஸிங் பீஜியன் கிளப் சார்பில் போட்டிகள் நடத்துகிறோம்.
முன்பு தகவல் பரிமாற்றத்துக்கு பயன்பட்ட ஹோமர் புறாக்கள் இன்று பந்தயப் புறாக்களாக மாறி யிருக்கின்றன. இந்த ஹோமர் ரக பந்தயப் புறாக்கள் ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் விட்டால்கூட சர்வ சாதாரணமாக வான்வெளியில் பறந்து, தான் வளர்ந்த இடத்துக்கு வந்து சேர்ந்துவிடும்.
“எனக்கு இப்போ 63 வயசா குது. 18 வயசில் புறா வளர்க்க ஆரம்பித்தேன். என் வாழ்கையில் சம்பாதித்த பணத்தில் பெரும் பகுதியை புறாக்களுக்காக செல வழித்துள்ளேன். புறாக்களும் என் குழந்தைகள்தான். என் வீட்டு மொட்டை மாடியில் சுதந்திரமாக பறந்து திரியும் 150-க்கும் அதிகமான புறாக்களுக்கு இரை கொடுப்பது, பராமரிப்பது என நான் காலை முதல் இரவு வரை பிஸியாக இருக்கிறேன். இதெல்லாம் சொன் னால் புரியாது. நேசிக்கும் உயிர்கள் எதுவாக இருந்தாலும் அதற்கு உணவளிக்கும்போது கிடைக் கும் மனதிருப்திக்கு அளவே இல்லை. மேலும் இன்றைய பரபரப்பான வாழ்கைக்கு நடுவே ஒவ்வொரு வரும் வீடுகளில் புறாக்களை வளர்த்தால் மன நிம்மதியும் மகிழ்ச் சியும் கிடைக்கும் என்பது என் அனுபவ கருத்து” என்றார்.