மற்றவை

பழங்குடி பெண்ணின் ரிக்ஷாவில் சவாரி செய்த குடியரசுத் தலைவர்

செய்திப்பிரிவு

சத்தீஸ்கர் மாநிலத்தில் பயணம் மேற்கொண்டுள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பழங்குடி பெண் ஒருவரின் ரிக்ஷாவில் அமர்ந்து கிராமத்தைச் சுற்றி வந்தார்.

சத்தீஸ்கரின் மாவோயிஸ்ட்டுகள் பாதிக்கப்பட்ட தந்தேவாடாவில் பெண்கள் சுயதொழில் செய்வதற்கு பல உதவிகளை மாநில அரசு செய்து வருகிறது. அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அங்கு சில நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.

மகளிர் கூட்டுறவு சங்கங்கள் மூலம் நிறைவேற்றப்படும் இத்திட்டங்கள் பழங்குடிப் பெண்கள் சுயதொழில் செய்து தன்னைக் காத்துக்கொள்வதற்காக நிச்சயம் உதவும். அதுமட்டுமின்றி இத்தகைய திட்டங்கள் மூலம் பெட்ரோல், டீசல் ஆகியவை பயன்படுத்தாமல் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் இ ரிக்ஷாவை ஆதரிப்பது பாராட்டுக்குரியது என்றார். பின்னர் ஒரு பழங்குடி பெண்ணின் ரிக்ஷாவில் அமர்ந்து சவாரி மேற்கொண்டார்.

பின்னர், ஹிரநகரின் கிராமத்திலுள்ள வனவாசி கல்யாண் ஆசிரமத்திற்குச் சென்றார். அங்கே குழந்தைகளுடன் மதிய உணவை சாப்பிடுவதற்கு முன் அவர்களுடன் பிரார்த்தனையில் ஈடுபட்டார்.

குடியரசுத் தலைவர் அங்கு ஒரு கணினி ஆய்வகத்தைத் திறந்து, இனிப்புகளை வழங்கினார், அவர் ராஷ்டிரபதி பவனில் இருந்து அந்த இனிப்புகளை குழந்தைகளுக்காக கொண்டு வந்திருந்தார்.

குடியரசுத் தலைவர் பங்கேற்ற இரு இடங்களுக்கும் மாநில முதல்வர் ராமன் சிங்கும் உடன் சென்றிருந்தார்.

SCROLL FOR NEXT