மற்றவை

‘செந்தமிழ் நாடென்னும் போதினிலே’ கவிதைக்கு மூன்றாம் இடம் அளித்த கவிதைப் போட்டி

ப.கோலப்பன்

“செந்தமிழ் நாடென்னும்

போதினிலே இன்பத்

தேன்வந்து பாயுது காதினிலே…” என்று துவங்கும் மகாகவி பாரதியார் கவிதையின் இனிமையையும் தனித்துவத்தையும் ரசித்து பாராட்டாதவர்களும் இல்லை; வியக்காதவர்களும் இல்லை. பாரதியாருக்குப்பின் எத்தனையோ உலகம் போற்றும் தமிழ் கவிஞர்களும் கவிதைகளும் படைக்கப்பட்ட போதிலும், இன்றும் அவரது கவிதைகளும், அதில் அவர் கையாண்ட அழகியலும் ஈடுசெய்ய முடியாததாகவே இருக்கிறது. ஆனால், அவர் ஒரு கவிதைப் போட்டியில் கலந்துக்கொண்டு, இந்த கவிதையைச் சமர்ப்பித்தபோது, அவருக்கு மூன்றாம் இடம்தான் கிடைத்தது என்றால் நம்ப முடிகிறதா?

ஆம்! 1900-க்களில் நடந்த ஒரு கவிதைப் போட்டியில்தான் இப்படியான ஒரு சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.

“இந்த கவிதைக்கு ரூ.100 பரிசாக வழங்கப்பட்டது. அப்போது, இந்த முடிவு குறித்து வி.வி.எஸ் ஐயர் வருந்தினார். ஆனால், இதனை பாரதியார் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அதற்கு பதிலாக, அந்த போட்டியின் முடிவுகளை முன்னரே முடிவு செய்திருப்பார்கள் என்று எங்களுக்கு ஆறுதல் கூறினார்”, என்று மண்டயம் ஸ்ரீனிவாசாசாரியாரின் மகள் யதுகிரி அம்மாள் நினைவுகூர்கிறார்.

மண்டயம் ஸ்ரீனிவாசாசாரியார் நடத்திவந்த ‘இந்தியா’ என்ற இதழுக்கு ஆசிரியர், பாரதியார். அதுமட்டுமின்றி, அவர் ஸ்ரீனிவாசாசாரியார் மற்றும் வி.வி.எஸ் ஐயரின் குடும்பத்தைச் சேர்ந்தவர். இந்தியாவை பிரிட்டிஷ் அரசு ஆண்டுவந்த காலத்தில், பாரதியார் புதுச்சேரிக்கு தப்பிச்செல்லவேண்டிய நிலை. அவர் மிகவும் பரிதாப நிலையில் இருந்தபோது, யதுகிரி அம்மாள் மற்றும் பலரின் வற்புறுத்தல் காரணமாக, இந்த கவிதைப் போட்டியில் கலந்துக்கொள்ள அவர் சம்மதித்தார்.

1912-ஆம் ஆண்டு முதல் 1918-ஆம் ஆண்டு வரையிலான பாரதியாரின் அரிய, கவித்துவமிக்க மனநிலையை விவரிக்கும் ‘பாரதி நினைவுகள்’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார், யதுகிரி அம்மாள்.

புதுச்சேரியில் சிறிது காலம் இருந்தபின், பாரதியாரின் குடும்பமும், யதுகிரி அம்மாளின் குடும்பமும் சென்னைக்கு குடிவந்தனர். திருவல்லிக்கேணியிலுள்ள துளசிங்க பெருமாள் தெருவிலுள்ள ஒரு வீட்டில் பாரதியார் குடியேற, யதுகிரி அம்மாள் பேயாழ்வார் தெருவில் வசித்தார். திருவல்லிக்கேணியில் பாரதியார் வாழ்ந்த வீட்டை, இன்று ‘பாரதியார் நினைவு இல்லம்’ என்று பெயரிட்டு பேணி காத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT