சவுதி அரேபியாவில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது, என்னோடு ஒரே அறையில் தங்கியிருந்த இந்து சகோதரர்கள், நாங்கள் நோன்பிருக்கும்போது அவர்களும் எதையும் சாப்பிட மாட்டார்கள்.
இஃப்தார் நிகழ்வின்போது நாங்கள் அவர்களையும் சேர்த்துக் கொள்வோம். கட்டுப்பாடு மிக்க ஒரு இஸ்லாமிய தேசத்தில், வயிற்றுப் பிழைப்புக்காக இருக்கிறோம் என்ற அச்சத்தில் செய்த காரியம் அல்ல அது. மனப்பூர்வமாக செய்த ஒன்று.
உண்மையில் இப்படிப்பட்டவர்கள்தான் அதிகம். சிவசேனை மக்களவை உறுப்பினர்களின் அநாகரிகச் செயலை மதநம்பிக்கைகள் கடந்து எல்லோரும் கண்டிக்க வேண்டும்.
- கே.எஸ். முகமத் ஷூஐப், காயல்பட்டினம்.