இப்படிக்கு இவர்கள்

பாராட்டுக்குரிய பதிவு

செய்திப்பிரிவு

தனுஷ்கோடி புயல் கதை மட்டுமல்ல, நல்லதங்காள் கதை தொடங்கி, வெள்ளையர்கள் ஆட்சிக் காலத்தில் இந்தியாவை உலுக்கிய 2 தாது வருசத்து பஞ்சம் வரையில் மக்கள் பாடிய அனுபவப் பாடல்கள் எல்லாம் ஓரளவுதான் தொகுக்கப்பட்டுள்ளன. சம்பவங்களை கதைப் பாடல்களாக்குவதில் கிராமியக் கலைஞர்கள் அதிகம் ஈடுபாடு காட்டி யுள்ளனர். மதுரையில் வாழ்ந்த பச்சியப்பன், சின்னாண்டி, திருவேங்கடம் ஓம் முத்துமாரி போன்ற கலைஞர்கள் இயற்றிய சம்பவப் பாடல்கள் இன்றும் கிராமியக் கலைஞர்களால் பாடப்படு கின்றன. இந்தத் தொடரில் அந்தக் கலைஞர்களை அடையாளம் காட்டுதல் அவர்களுக்குப் பெருமை சேர்க்கும்.

- இரா. தங்கப்பாண்டியன், மின்னஞ்சல் வழியாக.

SCROLL FOR NEXT