இப்படிக்கு இவர்கள்

ஊழலை ஒழித்தால்...?

செய்திப்பிரிவு

கும்பகோணம் பள்ளித் தீ விபத்தில் 94 இளம்பிஞ்சுகள் கருகி 10 ஆண்டுகள் நிறைந்துவிட்டன. ஆனால், அந்த வழக்கு இன்னும் முடிவுக்கு வரவில்லை என்ற செய்தி வேதனையளிக்கிறது. இன்னும் தமிழகத்தில் பல பள்ளிகள் தனியாரின் பணத்தாசையால் அவல நிலையில்தான் உள்ளது. இதற்கெல்லாம் காரணமான அரசும் அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டால்தான் விடிவுகாலம் பிறக்கும். கட்டுரையாசிரியர் கூறியபடி ஊழலை ஒழித்தால்தான் இதுபோன்ற சம்பவங்களுக்கு நிவாரணம்.

- ரேவதிப்ரியன், ஈரோடு.

SCROLL FOR NEXT