ஜூலை 20, 2014 அன்று வெளிவந்த 'பெண் இன்று' பல பயனுள்ள செய்திகளைச் சொன்னது. தெருவுக்குத் தெரு அழகு நிலையங்கள் வந்தாலும் ஆண்கள் எதிர்பார்க்கும் இயற்கை அழகினைத் தேடும் பெண்கள்தான் இன்று அதிகம் என்பதைப் புள்ளிவிவரத்தோடு சொன்னது உண்மைதான்.
விளம்பரப்படுத்தப்படும் சோப்பு மற்றும் கிரீம்கள் நிழல் படத்தில் வரும் நடிகைகளுக்கு வேண்டுமானால் பயன்படலாம். இயற்கை அழகுதான் நிரந்தரம் என்ற உண்மையைப் புரியவைத்த 'இயற்கை விரும்பும் பெண்கள்' செய்தி அருமை. பாராட்டுகள்.
- உஷாமுத்துராமன், திருநகர்.