கவிதா முரளிதரனின் ‘ஷேக்ஸ்பியரின் வீடு’ என்ற கட்டுரை பழையகால நினைவுகளை வரவழைத்தன. இந்தப் பாடங்களை நடத்தும்போது, ஆங்கிலப் பேராசிரியர்கள் நாடகக் கதாபாத்திரங் களாகவே மாறி, மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்டிவிடுவார்கள். அந்த நாடகங்களின் கதைப் போக்கும், காட்சிக் கோவையும் படிப்பவர் மனதை ஈர்க்கும்.
ஷேக்ஸ்பியரும் அவரது வம்சாவளியினரும் வாழ்ந்த வீடுகள் இலக்கியப் புனிதத்துவம் பெற்றவை. அவற்றைப் பராமரித்துவரும் ‘ஷேக்ஸ்பியர் பர்த் ப்ளேஸ் டிரஸ்ட்’டின் பணி பாராட்டுக்குரியது.
- குடந்தை வெ. இராஜகோபாலன், சென்னை.