’ராஜேந்திர சோழனைப் போற்றுவோம்!’ என்ற பாலகுமாரனின் கட்டுரையில், தனக்கே உரித்தான லாவகத்தில் வரலாற்றின் பக்கங்களின் நினைவுகளை ஒரு சரித்திரக் கதையாகக் கூறிய விதம் பிரமிக்க வைத்தது.
சோழர்களுக்கும் பாண்டியர்களுக்குமான போரில், பாண்டிய மன்னனின் மணிமுடியைத் தேடி இலங்கையின் தென்கோடிக்கே சென்று போர் புரிந்து வெற்றிபெற்ற கதை பழையதுதான் என்றாலும், அதனை பாலகுமாரனின் எழுத்தில் ஆதாரங்களுடன் படிப்பது என்பது மிகவும் ரசனையானது.
அன்று கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ தந்த பாதிப்பை பாலகுமாரனின் ராஜேந்திர சோழனைப் பற்றிய புதினம் அளிக்கும் என்பதற்கான முன்னோட்டமாக இக்கட்டுரை அமைந்துள்ளது.
- வீ. சக்திவேல், தே.கல்லுப்பட்டி.