இப்படிக்கு இவர்கள்

இப்படிக்கு இவர்கள்: ஆற்றுக்கு சமாதி, எச்சரிக்கும் ‘இந்து தமிழ்’ நாளிதழுக்கு நன்றி!

செய்திப்பிரிவு

ஆதி வள்ளியப்பன் எழுதிய ‘ஆறுகளுக்குச் சமாதி கட்டிவிட்டு சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது எப்படி?’ (03.06.22) என்ற கட்டுரையைப் படித்தேன். ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், தஞ்சை புது ஆற்றில் கான்கிரீட் தளமிடுவதால் ஏற்படப்போகும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளையும் நீர்வாழ் உயிரினங்களுக்கு ஏற்படவிருக்கும் ஆபத்து பற்றியும் அக்கறையுடன் செய்திகளையும் கட்டுரைகளையும் தொடர்ந்து வெளியிட்டு எச்சரித்துவருகிறது.

கான்கிரீட் தளமிட்டால் ஆற்றில் வாழும் உயிரினங்களுக்குச் சமாதி நிச்சயம். தண்ணீர் ஓட ஆரம்பித்ததும் கான்கிரீட் பெயர்ந்து விளைநிலங்களில் படிந்து, விவசாயத்தைப் பாழாக்கப்போவதும் நிச்சயம். தஞ்சை விவசாயிகளும்கூட இந்த ஆபத்தை இன்னும் புரிந்துகொள்ளவில்லை என்பது பெரிய சோகம். உங்கள் இதழில் தொடர்ந்து இதுபற்றிய கட்டுரைகளையும் செய்திகளையும் வெளியிட்டு, அரசின் கவனத்துக்குக் கொண்டுசெல்லும்படி கேட்டுக்கொள்கிறேன்.

- என்.செல்வராஜ், ஓய்வுபெற்ற தலைமையாசிரியர், தஞ்சாவூர்.

SCROLL FOR NEXT