வி.ஆர்.எஸ்.சம்பத் எழுதிய ‘வேந்தர் பொறுப்பு ஆளுநர்களுக்கு இடையூறே’ கட்டுரை (16.05.22) படித்தேன். தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மாநில அதிகாரங்களை உறுதிப்படுத்தவும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கடமைகளை நிறைவேற்றவும் பெரிதும் பயன்படும் என்பதும் அது மாநில அரசின் உரிமை முழக்கம் என்பதும் தலையாய கொள்கையாக இருப்பது ஒருபுறம் இருக்க, அதனால் பல்கலைக்கழக வேந்தர்களாக நியமிக்கப்படுவோர் எவ்வளவு பணிச் சுமையைச் சுமக்க வேண்டியவர்களாகிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்டி எழுதப்பட்ட கட்டுரை ஒரு மாறுபட்ட பார்வையை நம்முன் நிலைநிறுத்துகிறது.
இரண்டு பல்கலைக்கழகங்கள் மட்டுமே இருந்த தமிழ்நாட்டில், இன்று 10-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் வந்துவிட்ட நிலையில், அந்த அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் வேந்தராக நியமிக்கப்படும் ஆளுநர், அவருடைய அரசமைப்புக் கடமையான ஆளுநர் பொறுப்பை நிறைவேற்றுவாரா, அல்லது கூடுதல் பொறுப்பாக வந்துள்ள பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பைக் கவனிப்பாரா, வேந்தர் பொறுப்பின் காரணமாக அவரது அடிப்படையான ஆளுநர் பதவியின் கடமை தேங்கிவிடாதா என்றெல்லாம் கட்டுரையில் கேட்டிருப்பது நடுநிலையான பார்வை. இந்தக் கோணத்தில் இதுவரை வராத விமர்சனத்தை வெளியிட்ட ‘இந்து தமிழ்’ நாளிதழுக்கு நன்றி!
- சிவ.ராஜகுமார், சிதம்பரம்.