தமிழ் ‘தி இந்து’ நாளிதழை எடுத்ததும் நான் முதலில் படிக்கும் பகுதி இரண்டாம் பக்கத்தில் உள்ள பிரமுகர்கள் பற்றிய குறிப்புகள். தெரிந்தவர்களைப் பற்றிய தெரியாத விஷயங்களைத் தெரிந்துகொள்ள முடிகிறது. எல்லிஸ் ஆர்.டங்கன் பற்றி எழுதியிருக்கிறீர்கள். மறைவதற்கு ஐந்தாறு வருடங்களுக்கு முன்பு அவர் சென்னை வந்தார். அமெரிக்கத் தூதரகம் அவர் திரையுலகப் பிரமுகர்களைச் சந்திக்க ஏற்பாடு செய்தது. இது வாசகர்களுக்குப் புதிய செய்தி.
இந்தப் பகுதி வாசகர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இந்தத் தொடரை ஒரு புத்தகமாக வெளியிடலாம். இது ஒரு நல்ல தகவல் களஞ்சியமாக அமையும்.
- நல்லி குப்புசாமி செட்டி, சென்னை.