இப்படிக்கு இவர்கள்

சாலை விதிமுறைகள்

செய்திப்பிரிவு

‘விபத்தில்லாப் போக்குவரத்தே லட்சியம்’ தலையங்கம் படித்தேன். இந்தியாவைப் பொறுத்தவரையில் விபத்துக்கு முக்கியக் காரணமாக அமைவது சாலை விதிகளைச் சரிவரப் பின்பற்றாததுதான். சாலை விதிகளைத் தெரிந்து வைத்திருப்பதுமில்லை, தெரிந்துகொள்ள முற்படுவதுமில்லை. எச்சரிக்கைப் பலகை இருக்கும் இடத்திலேயே அதிகமான விபத்துக்கள் நடைபெறுவதே இதற்கு உதாரணம்.

அப்படி என்றால், அரசாங்கம் தன் கடமையைச் செய்தும் விதிகளைப் பின்பற்றாத வாகன ஓட்டிகள்தானே காரணம்? அவசர கதியான வாழ்க்கையில் உயிரை இழக்கும் இந்த நிலைக்குத் தனி நபர் முதல் சமுதாயம் வரை அனைவரும் பொறுப்பேற்க வேண்டும். தனி நபர் விழிப்புணர்வும் விதிகளை மீறுவது குற்றம் என்ற பய உணர்வும்தான் விபத்தில்லாப் போக்குவரத்தை உறுதி செய்ய முடியும்.

வெ.சிவ ஆனந்த கிருஷ்ணன், பத்மநேரி, களக்காடு.

SCROLL FOR NEXT