‘டிஜிட்டல் இந்தியா’ எனப் பெருமையாக உலக அரங்கில் பேசிக்கொண்டிருக்கும் இக்காலகட்டத்திலும் பெண்களைக் கருவிலேயே அழித்தொழிக்கும் அநீதி நடந்தேறுகிறது என்றால் என்ன அர்த்தம்? பெண்ணுக்கான வாழ்வுரிமையே இன்னும் பெற்றுத்தராத நாடாக இந்தியா உள்ளது. இதற்கு மாற்று பெண்ணுக்குக் கல்வி மட்டுமே.
- கிருஷ்ணன், கும்பகோணம்.
ஒரே ஒரு ஆதி மூலம்
ஒரே ஒரு மொழியை மட்டுமே பேசிய மக்களின் மொழியில் எழுதப்பட்ட ஒருநூல் இங்குள்ளது என இனி எவரும் சொல்ல முடியாது என வரலாற்றாசிரியர் ரொமீலா தாப்பர் கூறியிருப்பது சிந்திக்கவைக்கிறது. ‘உண்மை என்பது ஒன்றுதான்’ எனும் கூற்றைக் காலங்காலமாகக் கேட்டுவருகிறோம். அதே போல ஒரே ஒரு ஆதி மூலம் மட்டும்தான் இருக்க முடியும். அதுதான் தொடக்கப்புள்ளி என்னும் கற்பிதத்தில் வளர்த் தெடுக்கப் பட்டிருக்கிறோம். ஆனால், ரொமீலா தாப்பர் சொல்வதைப் பார்த்தால் ஆரம்பக் காலத்திலேயே பல கலாச்சாரங்கள் இருந்திருக்கின்றன. இது நம்முடைய அத்தனை நம்பிக் கைகளையும் அசைத்துப் பார்க்கிறது.
- ஜான்சன், ஈரோடு.