இப்படிக்கு இவர்கள்

வேற்றுமையில் ஒற்றுமை?

செய்திப்பிரிவு

உலக அரங்கில் இந்தியாவின் அடையாளமாக இருப்பது வேற்றுமையில் ஒற்றுமையும், சகிப்புத்தன்மையும்தான்.

ஆனால், நாட்டினுடைய பன்முகத்தன்மையை, ஜனநாயகத்தை காலங்காலமாக மறுப்பவர்கள் இந்துத்துவவாதிகள். அதனால்தான் இதைக் காக்கப் போராடிய காந்தியையும் நேருவையும் எதிரிகளாகக் கருதுகிறார்கள். பல வருடங்களாகவே அவர்கள் செய்துவந்த முயற்சிக்கு இப்போது மோடியின் ஆட்சியில் பலன் கிடைத்துவிட்டதாக நினைக்கிறார்கள்.

அதற்குத் தடையாக இருக்கும் எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்களைக் கொல்வதன் மூலம் அனைவருக்கும் எச்சரிக்கை விடுக்கிறார்கள். இத்தகைய போக்கு எத்தனை ஆபத்து என்பதை ‘இருண்ட காலத்தை நோக்கிச் செல்கிறதா இந்தியா?’ கட்டுரை தெளிவாக முன்வைத்தது.

- சனா பாரூக், வி.களத்தூர்.

SCROLL FOR NEXT